Categories: சினிமா

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் மூக்குத்தி அம்மன் -2.. நயன்தாராவுக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா..?

Spread the love

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு இதுவரை பார்க்காத அம்மன் படங்களிலிருந்து வித்தியாசமான கதைக்களத்துடன் மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் அம்மனாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்தார். வழக்கமான அம்மன் படங்களை போல் இல்லாமல் டான்ஸ், பாட்டு, காதல் ஆகியவற்றை கலந்து வித்தியாசமான கதைக்களத்துடன் ஆர்.ஜே பாலாஜி களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

தற்போது அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை வேல் ஃபிலிம் சார்பாக ஐசரி கே கணேஷ் தயாரிக்க உள்ளார். மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். இந்த படத்தை சுந்தர் சி இயக்குவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான மதகஜராஜா திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது.

இதனையடுத்து மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான வேளைகளில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. பொதுவாகவே சுந்தர் சி இயக்கும் பேய் படங்கள் காமெடி ஹாரர் கலந்து ரசிகர்களை கவரும். இப்போது மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை சுந்தர் சி இயக்குவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் இந்த படம் குறித்து ஒரு தகவல்  வெளியாகியுள்ளது.

அதாவது, இந்த படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாராகிறதாம். இதில் நயன்தாராவுக்கு மட்டும் 10 கோடி சம்பளமாம். மேலும் சுந்தர் சிக்கு 20 கோடி சம்பளமும் பேசப்பட்டுள்ளதாம். மீதி செலவுகளுக்கு 70 கோடியாம். மிகப்பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இந்த படம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Soundarya

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

4 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

5 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

5 மணத்தியாலங்கள் ago