சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய ரகசிய தகவல்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள் மயமாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாரியத்தின் கணக்கு பிரிவில் வைக்கப்பட்டிருந்த இந்த ஆவணங்கள் மற்றும் கணினி பாகங்கள் திருடு போனது குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த மே மாதம் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், வாரிய அலுவலகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நாட்களைப் பயன்படுத்தி இந்த திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அலுவலகப் பூட்டை உடைக்காமல், மிகவும் சாதுரியமாக இந்தத் திருட்டு நடத்தப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் தரப்பில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மின்வாரிய அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரித்தும் தீவிரமாகப் புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மனித உருவில் வந்த அரக்கனான வளர்ப்புத் தந்தையின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி, அர்ஷித் என்ற பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த…
மத்தியப் பிரதேசத்தின் மவ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் அகான்க்சா சதுர்வேதி, ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும்…
டெல்லி மாளவியா நகரிலுள்ள 'புளோரிஷ் ஸ்டே' (Flourish Stay) என்ற விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குருகிராமைச் சேர்ந்த…
இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்களில் வெறும் சில லைக்குகளுக்காகவும் (Likes), தங்களது வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்கள் பலரும்…
சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத் துறையில் (Town Planning Department) நீண்ட காலமாக நிலவி வந்த லஞ்சம், முறைகேடுகள் மற்றும் கட்டிட…
ஓமலூர் TVK வேட்பாளர் அதியமான், சேலம் மேற்கு TVK MLA லட்சுமணன் வாக்காளர்களுக்கு ₹2,000 கொடுத்துதான் தேர்தலில் வெற்றி பெற்றார்…