டெல்லி மாளவியா நகரிலுள்ள ‘புளோரிஷ் ஸ்டே’ (Flourish Stay) என்ற விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குருகிராமைச் சேர்ந்த சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் (CA) விவேக் அகர்வால் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில், விடுதியின் 3-வது மாடியில் சிக்கிக்கொண்ட விவேக், தனது சகோதரருக்குத் தொலைபேசி வாயிலாக, “தம்பி, நாம் தப்பிப்பது கடினம் என்று நினைக்கிறேன். எங்கு பார்த்தாலும் கரும்புகையாக இருக்கிறது, மூச்சுத் திணறுகிறது…” என்று கண்ணீருடன் பேசிய கடைசி வார்த்தைகள் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளன. விவேக்கின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவரைப் பார்ப்பதற்காக வந்த விவேக்கின் தாய், மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தக் கோர விபத்திற்கு விடுதி நிர்வாகத்தின் அலட்சியமும், சட்டவிரோத கட்டுமானமுமே முக்கியக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. வெறும் 6 அறைகளுக்கு மட்டுமே அனுமதி பெற்றிருந்த அந்த விடுதியில், விதிமுறைகளை மீறி 5 மாடிகளில் 25-க்கும் மேற்பட்ட அறைகள் கட்டப்பட்டிருந்தன. மேலும், தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழ் (NOC) எதுவும் பெறப்படவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன் விடுதியின் சென்சார் கதவுகள் முற்றிலும் முடங்கியதாலும், ஜன்னல்கள் முழுமையாக மூடப்பட்டிருந்ததாலும் உள்ளே இருந்தவர்கள் வெளியேற முடியாமல் கரும்புகையில் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விடுதியின் உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பேரிடர் நிகழ்ந்த அந்த இக்கட்டான சூழலில், உள்ளூர் மக்கள் காட்டிய மனிதநேயம் பலரது உயிரைக் காப்பாற்றியுள்ளது. விடுதியின் எதிரே மெத்தைக்கடை நடத்தி வரும் அர்மான் என்ற வாலிபர், தீப்பற்றி எரிவதைக் கண்டதும் உடனடியாகத் தனது கடையிலிருந்த புதிய மெத்தைகள் மற்றும் போர்வைகளைச் சாலையில் பரப்பினார். இதனால் மேல் மாடியிலிருந்து கீழே குதித்த பலரது உயிர் தப்பியது. மேலும், உள்ளூர் இளைஞர்கள் சிலர் ஜன்னல் கம்பிகளை உடைத்து, சுமார் 58 பேரை மீட்டதோடு முதலுதவியும் அளித்துள்ளனர். இந்த விபத்தில் 11 வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 15 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் உடையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 49 வயதான சுகராஜ், அங்குள்ள ஒரு தனியார் நூற்பாலையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து…
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்ற நாளில் இருந்து, அவரது ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் பெரும்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அம்மாக்குளம் கிராமத்தில், நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் இளங்கோவன் (50) என்பவர்…
தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதிய அரசு அமைந்து ஒரு மாதமே நிறைவடைந்துள்ள…
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு இலக்கணம் மற்றும் அவரது பிரம்மாண்டமான 'அன்னை இல்லம்' குறித்த பல அரிய, வியப்பூட்டும்…
தமிழக அரசு அலுவலகங்களில் இன்னும் மூன்று மாதங்களில் லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழக அரசு தீவிரமாக…