தங்கள் பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளுக்காகத் தங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்யும் பெற்றோருக்கு, விதி சில நேரங்களில் மீளாத் துயரத்தையே பரிசாக அளித்து விடுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ் சந்த் என்பவரின் கதையும் அப்படித்தான் முடிந்துள்ளது. தனது 24 வயது மகள் ஏக்தா மருத்துவராகி குடும்பத்தின் வறுமையை மாற்றுவார் என்ற நம்பிக்கையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தின் ஒரு பகுதியை விற்று, அவரை கிர்கிஸ்தான் நாட்டிற்கு அனுப்பி எம்பிபிஎஸ் (MBBS) படிக்க வைத்துள்ளார்.
மகள் மருத்துவராகிவிட்ட நிலையில், அவரது 25-வது பிறந்தநாளைக் கொண்டாட இன்னும் சில நாட்களே இருந்த சூழலில் விதி விளையாடியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு, டெல்லி சாகேத் அருகே உள்ள சைதுலாஜாப் பகுதியில் இருந்த நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த நேரத்தில், மகள் ஏக்தா அங்குள்ள ‘ஆண்டி வாலா கிச்சன்’ என்ற உணவகத்திற்கு இரவு உணவு அருந்தச் சென்றிருந்தார். கட்டிடம் இடிந்து விழுந்ததில் அவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணிகளில், சுமார் 19 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை அன்று ஏக்தாவின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. தனது மகளை ஒரு மருத்துவராகப் பார்த்து மகிழ நினைத்த தந்தை ரமேஷ் சந்த், கண்ணீரோடு மகளின் சடலத்தை மட்டும் பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். பிள்ளைகளின் கனவுகளுக்காக தங்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையே தியாகம் செய்த ஒரு ஏழை விவசாயிக்கு, இந்தத் துயரச் சம்பவம் இண ஈடு செய்ய முடியாத பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனித உருவில் வந்த அரக்கனான வளர்ப்புத் தந்தையின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி, அர்ஷித் என்ற பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த…
மத்தியப் பிரதேசத்தின் மவ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் அகான்க்சா சதுர்வேதி, ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும்…
டெல்லி மாளவியா நகரிலுள்ள 'புளோரிஷ் ஸ்டே' (Flourish Stay) என்ற விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குருகிராமைச் சேர்ந்த…
இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்களில் வெறும் சில லைக்குகளுக்காகவும் (Likes), தங்களது வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்கள் பலரும்…
சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத் துறையில் (Town Planning Department) நீண்ட காலமாக நிலவி வந்த லஞ்சம், முறைகேடுகள் மற்றும் கட்டிட…
ஓமலூர் TVK வேட்பாளர் அதியமான், சேலம் மேற்கு TVK MLA லட்சுமணன் வாக்காளர்களுக்கு ₹2,000 கொடுத்துதான் தேர்தலில் வெற்றி பெற்றார்…