குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஆனது நேற்று புறப்பட்ட சில வினாடிகளில் அகமதாபாத் விமான நிலையம் அருகிலுள்ள பிஜே மருத்துவ கல்லூரி விடுதியில் கட்டடத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பயணிகள், விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணித்த நிலையில் இதில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்க 241 பேர் உயிரிழந்தார்கள். மொத்தமாக 265 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விமான விபத்தில் பயணித்த குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபா னியும் விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் விபத்தா..? அல்லது சதி செயலா அல்லது பறவை மோதியது காரணமா? என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இணையத்தில் ஒரு விஷயம் வைரலாகி வருகிறது. அதாவது விமான விபத்து நடந்த அன்று காலையிலேயே mid-day என்ற ஆங்கில பத்திரிகையின் முன் பக்கத்தில் KidZania என்னும் விளம்பரத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்குள்ளாவது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து மதியமே இந்த விமான விபத்து நடந்துள்ள நிலையில் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…