#image_title
சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும் வகையிலேயே எடுக்கப்பட்டும் வருகிறது. இதில் முன்னிலையில் இருப்பவை சன் டிவி மற்றும் விஜய் டிவி தொலைக்காட்சி சேனல்கள். இவற்றில் ஒளிபரப்பாகும் மெகா தொடர்களுக்கு என ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.
அந்த வகையில் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மக்கள் மனம் கவர்ந்த மெகா தொடர் ‘மெட்டி ஒலி’. இத்தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் திருமுருகன். இவரை திருமுருகன் என்று கூறுவதை விட கோபி என்று கூறினால் தான் அனைவருக்கும் தெரியும். இவர் இந்த சீரியலில் நடித்தும், இயக்கியும் வந்தார்.
திருமுருகன் சீரியல்களில் மட்டுமின்றி எம் மகன், முனியாண்டி உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். அப்படி சன் டிவியில் ஒளிபரப்பான மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற சீரியல் ஆன மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம் போன்ற தொடர்கள் கொரோனா லாக் டவுன் சமயத்தில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடர்களுக்கு அப்பொழுதும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இந்நிலையில் தற்பொழுது மெட்டி ஒலி 2ம் சீசன் தொடங்குகிறது எனவும் அதற்காக பணிகள் நடந்து வருகிறது என கடந்த வருடமே கூறப்பட்டது.
ஆனால் தற்போது வரை அதிகாரபூர்வ தகவல் எதுவும் வராமல் இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஒரு புது அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, மெட்டி ஒலி 2 சீரியலை திருமுருகன் இயக்கவில்லையாம். விக்ரமாதித்தன் என்பவர் தான் இயக்க உள்ளாராம். இதனால் இயக்குனர் திருமுருகன் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். விரைவில் இதுகுறித்து சன் டிவி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…