மீண்டும் களத்தில் இறங்கும் குடும்பங்கள் கொண்டாடும் ‘மெட்டி ஒலி’ சீரியல் … ட்விஸ்ட் வைத்த சன் டிவி… அப்செட்டில் சீரியல் ரசிகர்கள்…

By Begam

Updated on:

சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும் வகையிலேயே எடுக்கப்பட்டும் வருகிறது. இதில் முன்னிலையில்  இருப்பவை சன் டிவி மற்றும் விஜய் டிவி தொலைக்காட்சி சேனல்கள். இவற்றில் ஒளிபரப்பாகும் மெகா தொடர்களுக்கு என ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

   

அந்த வகையில் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மக்கள் மனம் கவர்ந்த மெகா தொடர் ‘மெட்டி ஒலி’. இத்தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் திருமுருகன். இவரை திருமுருகன் என்று கூறுவதை விட கோபி என்று கூறினால் தான் அனைவருக்கும் தெரியும். இவர் இந்த சீரியலில் நடித்தும், இயக்கியும் வந்தார்.

திருமுருகன் சீரியல்களில் மட்டுமின்றி எம் மகன், முனியாண்டி உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். அப்படி சன் டிவியில் ஒளிபரப்பான மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற சீரியல் ஆன மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம் போன்ற தொடர்கள் கொரோனா லாக் டவுன் சமயத்தில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடர்களுக்கு அப்பொழுதும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இந்நிலையில் தற்பொழுது மெட்டி ஒலி 2ம் சீசன் தொடங்குகிறது எனவும் அதற்காக பணிகள் நடந்து வருகிறது என கடந்த வருடமே கூறப்பட்டது.

ஆனால் தற்போது வரை அதிகாரபூர்வ தகவல் எதுவும் வராமல் இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஒரு புது அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, மெட்டி ஒலி 2 சீரியலை திருமுருகன் இயக்கவில்லையாம். விக்ரமாதித்தன் என்பவர் தான் இயக்க உள்ளாராம். இதனால் இயக்குனர் திருமுருகன் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். விரைவில் இதுகுறித்து சன் டிவி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.