Categories: சினிமா

“லியோ உண்மையான வசூல் எவ்ளோன்னு எனக்கு தெரியும்”.. – மீசை ராஜேந்திரன் பளிச்.. உண்மையா.? உருட்டா..?

Spread the love

நடிகர் விஜய் குறித்து, நடிகர் மீசை ராஜேந்திரன் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக, ஜெயிலர் படத்தின் வசூலை லியோ நெருங்க முடியாது. அப்படி ஜெயிலர் படத்தின் வசூல் சாதனை 525 கோடி ரூபாயை லியோ வசூல் கடந்து விட்டால், தனது மீசையை எடுத்துவிடுவதாக சவால் விட்டு இருந்தார். ஆனால், இப்போது 12 நாட்களில் லியோ ரூ. 540 கோடியை கடந்துவிட்டதாக லியோ வெற்றி விழா நடத்தப்பட்டுள்ளது. மேலும், நேற்று முதல், மீசை இல்லாத நிலையில், மீசை ராஜேந்திரனின் போலியான படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் மீசை ராஜேந்திரன் கூறியதாவது, லியோ படம் ரிலீஸ் ஆன அன்று, படத்தின் வசூல் என்னவென்று செய்தியாளர்கள் கேட்ட போது, பிளான் பண்ணீட்டு இருக்கிறோம், இரவு 8 மணிக்கு சொல்கிறோம் என பதில் சொன்னவர் தயாரிப்பாளர் லலித்குமார். இப்படி சொல்வதை கேட்டாலே தெளிவாக புரிகிறது. அவர்கள் உண்மையான வசூலை சொல்லவில்லை. என்ன வசூல் என்று பிளான் பண்ணி சொல்லி இருக்கிறார்கள் என்று.

லியோ படத்தை பொருத்தவரை, ரிலீஸ் செய்யப்பட்ட பல தியேட்டர்களில் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. சில தியேட்டர்களில் காட்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ரசிகர்கள் இல்லாமல், தியேட்டர்கள் காற்று வாங்குகிறது. கர்நாடகாவில் உள்ள தியேட்டர்களில் லியோ படத்தை வெளியிட்டுள்ள ஒருவர், இதுவரை 60 லட்சம் ரூபாய் வரை மட்டுமே லாபம் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

என்னுடைய கணிப்பு படி தமிழகத்தில் ரூ. 200 கோடி, பிற மாநிலங்கள், யுனிவர்ஸ் எல்லாம் சேர்த்து இவர்கள் சொல்கிற வசூலில் பாதி கூட வசூல் ஆகவில்லை. ஒரு பொய்யை மறைக்க பல பொய்களை சொல்லி வருகின்றனர். விஜய் அரசியலுக்கு வர இருப்பதால், அவரை பெரிய ஆளாக காட்ட இப்படி பொய்யான தகவல்களை பரப்புகின்றனர் என்று கூறி இருக்கிறார் மீசை ராஜேந்திரன்.

admin

Recent Posts

“செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு…” தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்… பிணத்தை எடுக்க கூடாது என மிரட்டும் கொடூர கிராமம்… கள்ளக்குறிச்சியில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

1 minute ago

“என் அம்மா கூட பேசாத…” தாயுடன் தகாத உறவு… ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர்… மகனின் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…

11 minutes ago

“அறிகுறிகளே இல்லாமல் தாக்கும் சைலண்ட் கில்லர்…” தவிக்கும் 3.86 கோடி மக்கள்…. சர்வதேச ஆய்வில் வெளியான பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்…!!

இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…

20 minutes ago

மிரண்டு போன த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள்… வெள்ளை காகிதத்தில் கையெழுத்து…? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…

39 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! வேகமாக வந்த எக்பிரஸ்… தண்டவாளத்தில் சரிந்த மண், மின்கம்பம்… சிக்னல் காட்டி ரயிலை நிறுத்திய ஊழியர்கள்… பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே டெல்லி - ஹவுரா ரயில் வழித்தடத்தில் கட்டுமானப் பணிகளின் போது திடீரென மண்…

52 minutes ago

மகளிர் உரிமை தொகை…! அரசின் இரட்டிப்பு சர்ப்ரைஸ்…! இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் கோடிக்கணக்கான இல்லத்தரசிகளுக்கு அரசு தரப்பில் இரட்டிப்பு…

59 minutes ago