உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே டெல்லி – ஹவுரா ரயில் வழித்தடத்தில் கட்டுமானப் பணிகளின் போது திடீரென மண் சரிந்து மின்கம்பம் மற்றும் கனரக இயந்திரங்கள் தண்டவாளத்தில் விழுந்ததில் நிகழவிருந்த மாபெரும் ரயில் விபத்து, ரயில்வே ஊழியர்களின் சமயோசித செயலால் நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் – ஜிங்குரா ரயில் பிரிவில் உள்ள ஆம் காட் பகுதிக்கு அருகே, மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அப்போது எதிர்பாராதவிதமாகக் கட்டுமான இடத்தில் கடுமையான மண் சரிவு ஏற்பட்டதில், அங்கிருந்த உயர் அழுத்த மின்சாரத் தூண் மற்றும் கட்டுமான இயந்திரங்கள் நேராக ரயில் தண்டவாளத்தின் மீது சரிந்து விழுந்தன.
அதே நேரத்தில் அந்த வழித்தடத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த கோண்டியா – பரௌனி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கிப் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உருவானது. ஆனால், இதனை உடனடியாகக் கவனித்த ரயில்வே ஊழியர்கள், சிவப்புத் துணியைக் காட்டி சிக்னல் கொடுத்தும் எச்சரிக்கை விடுத்தும் சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தியதால், ஆயிரக்கணக்கான பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி – ஹவுரா வழித்தடத்தின் ‘டவுன்’ பாதையில் ரயில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் 13-க்கும் மேற்பட்ட நீண்ட தூர ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதோடு, சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதனையடுத்து ரயில்வே தொழில்நுட்பக் குழுவினர் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு போக்குவரத்தைச் சீர் செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…