மகளிர் உரிமை தொகை…! அரசின் இரட்டிப்பு சர்ப்ரைஸ்…! இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!

Spread the love

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் கோடிக்கணக்கான இல்லத்தரசிகளுக்கு அரசு தரப்பில் இரட்டிப்பு சர்ப்ரைஸ் காத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான முதற்கட்டப் பணிகளைத் தமிழக அரசு தீவிரமாகத் தொடங்கியுள்ளதாக வெளியான தகவல் பெண்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடப்பு நவம்பர் மாதத்திற்கான உரிமைத் தொகையும் முன்கூட்டியே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும். ஆனால், இம்மாதம் நவம்பர் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (வங்கி விடுமுறை தினம்) வருவதால், அதற்கு முந்தைய நாளான நவம்பர் 14-ஆம் தேதியே தகுதியுள்ள மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாகத் தீபாவளிப் பண்டிகையையொட்டி உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்படும் எனப் பேசப்பட்ட நிலையில், தற்போது ரூ.2,500 உயர்வுக்கான பணிகள் மற்றும் முன்கூட்டியே பணம் வரவு வைக்கப்படும் தகவல் ஆகிய இரட்டிப்பு மகிழ்ச்சிச் செய்திகளால் தமிழகப் பெண்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து… தலைக்குப்புற கவிழ்ந்து 22 பேர் படுகாயம்… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

புதுக்கோட்டை அருகே 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

39 minutes ago

பொம்மையை தாயாக நினைத்து வளர்ந்த குரங்கு… இன்று மற்ற குட்டிகளுக்கு பாதுகாவலனாக மாறிய அதிசயம்… கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

ஜப்பான் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில், பிறந்ததும் தாயால் கைவிடப்பட்டுத் தனிமையிலும் மற்ற குரங்குகளின் தாக்குதலிலும் தவித்து வந்த…

45 minutes ago

கார் கண்ணாடியை துளைத்த தோட்டாக்கள்…! நூலிழையில் உயிர் தப்பிய தந்தை மற்றும் 1 வயது மகள்… 3 கி.மீ துரத்தி சென்ற கும்பல்… பகீர் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…

1 மணத்தியாலம் ago

போனட்டில் தொங்கியபடி அலறிய காவலர்… காரில் 200 மீட்டர் இழுத்து சென்ற பயங்கரம்… மும்பையில் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…

2 மணத்தியாலங்கள் ago