மகளிர் உரிமை தொகை…! அரசின் இரட்டிப்பு சர்ப்ரைஸ்…! இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!

By Devi Ramu on கார்த்திகை 12, 2026

Spread the love

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் கோடிக்கணக்கான இல்லத்தரசிகளுக்கு அரசு தரப்பில் இரட்டிப்பு சர்ப்ரைஸ் காத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான முதற்கட்டப் பணிகளைத் தமிழக அரசு தீவிரமாகத் தொடங்கியுள்ளதாக வெளியான தகவல் பெண்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடப்பு நவம்பர் மாதத்திற்கான உரிமைத் தொகையும் முன்கூட்டியே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும். ஆனால், இம்மாதம் நவம்பர் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (வங்கி விடுமுறை தினம்) வருவதால், அதற்கு முந்தைய நாளான நவம்பர் 14-ஆம் தேதியே தகுதியுள்ள மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

   

முன்னதாகத் தீபாவளிப் பண்டிகையையொட்டி உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்படும் எனப் பேசப்பட்ட நிலையில், தற்போது ரூ.2,500 உயர்வுக்கான பணிகள் மற்றும் முன்கூட்டியே பணம் வரவு வைக்கப்படும் தகவல் ஆகிய இரட்டிப்பு மகிழ்ச்சிச் செய்திகளால் தமிழகப் பெண்கள் உற்சாகமடைந்துள்ளனர்.