Connect with us

CINEMA

“லியோ உண்மையான வசூல் எவ்ளோன்னு எனக்கு தெரியும்”.. – மீசை ராஜேந்திரன் பளிச்.. உண்மையா.? உருட்டா..?

நடிகர் விஜய் குறித்து, நடிகர் மீசை ராஜேந்திரன் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக, ஜெயிலர் படத்தின் வசூலை லியோ நெருங்க முடியாது. அப்படி ஜெயிலர் படத்தின் வசூல் சாதனை 525 கோடி ரூபாயை லியோ வசூல் கடந்து விட்டால், தனது மீசையை எடுத்துவிடுவதாக சவால் விட்டு இருந்தார். ஆனால், இப்போது 12 நாட்களில் லியோ ரூ. 540 கோடியை கடந்துவிட்டதாக லியோ வெற்றி விழா நடத்தப்பட்டுள்ளது. மேலும், நேற்று முதல், மீசை இல்லாத நிலையில், மீசை ராஜேந்திரனின் போலியான படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 Actor Meesai Rajendran

   

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் மீசை ராஜேந்திரன் கூறியதாவது, லியோ படம் ரிலீஸ் ஆன அன்று, படத்தின் வசூல் என்னவென்று செய்தியாளர்கள் கேட்ட போது, பிளான் பண்ணீட்டு இருக்கிறோம், இரவு 8 மணிக்கு சொல்கிறோம் என பதில் சொன்னவர் தயாரிப்பாளர் லலித்குமார். இப்படி சொல்வதை கேட்டாலே தெளிவாக புரிகிறது. அவர்கள் உண்மையான வசூலை சொல்லவில்லை. என்ன வசூல் என்று பிளான் பண்ணி சொல்லி இருக்கிறார்கள் என்று. Actor Meesai Rajendran

லியோ படத்தை பொருத்தவரை, ரிலீஸ் செய்யப்பட்ட பல தியேட்டர்களில் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. சில தியேட்டர்களில் காட்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ரசிகர்கள் இல்லாமல், தியேட்டர்கள் காற்று வாங்குகிறது. கர்நாடகாவில் உள்ள தியேட்டர்களில் லியோ படத்தை வெளியிட்டுள்ள ஒருவர், இதுவரை 60 லட்சம் ரூபாய் வரை மட்டுமே லாபம் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

என்னுடைய கணிப்பு படி தமிழகத்தில் ரூ. 200 கோடி, பிற மாநிலங்கள், யுனிவர்ஸ் எல்லாம் சேர்த்து இவர்கள் சொல்கிற வசூலில் பாதி கூட வசூல் ஆகவில்லை. ஒரு பொய்யை மறைக்க பல பொய்களை சொல்லி வருகின்றனர். விஜய் அரசியலுக்கு வர இருப்பதால், அவரை பெரிய ஆளாக காட்ட இப்படி பொய்யான தகவல்களை பரப்புகின்றனர் என்று கூறி இருக்கிறார் மீசை ராஜேந்திரன்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top