Categories: சினிமா

சூர்யவம்சம் படத்தில் கமிட்டான மாஸ்டர் மகேந்திரன்… அந்த காரணத்தால் அடித்து விரட்டிய விக்ரமன்.. அப்படி என்ன செய்தார்?

Spread the love

நடிகர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். கடந்த 1994-ஆம் ஆண்டு சரத்குமாரின் நாட்டாமை படத்தில் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு நடிகர் பாண்டியராஜுடன் இணைந்து தாய்க்குலமே தாய்க்குலமே படத்திலும் நடித்து பிரபலமானார். அந்த படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தமிழ்நாடு அரசின் மாநில விருது மகேந்திரனுக்கு கிடைத்தது.

பின்னர் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, கோபாலா கோபாலா, காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாகவே 100 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் என்ற சாதனையைப் படைத்தார் மகேந்திரன்.

அதன் பின்னர் ஒரு இடைவெளிக்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அப்படி  மகேந்திரன் நடித்த விழா ஆனந்தம், விந்தை, நாடோடி கனவு, விரைவில் ஆசை உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவு அவருக்கு வரவேற்பை தரவில்லை.  கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் பவானி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மகேந்திரன் நடித்து கவனம் பெற்றார்.

இப்போது அவர் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. இந்நிலையில் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த சூர்யவம்சம் திரைப்படத்தில் சரத்குமாரின் மகனாக நடிக்க மாஸ்டர் மகேந்திரன்தான் முதலில் கமிட் ஆனாராம்.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த அவர் அதிகாரமாக “எனக்கு எத்தனை நாள் ஷூட்டிங்? என்னா டயலாக்? என்னன்ன ஆங்கிள்ல எடுக்கப் போறீங்க?” என அதிகாரம் செய்வது போல கேட்டுள்ளார். அதனால் கடுப்பான இயக்குனர் விக்ரமன் “முதல்ல இந்த பையன அனுப்பிடுங்க… கோபத்துல நான் எதாவது அடிச்சுட கிடிச்சுட போறேன்” என அனுப்பிவிட்டாராம். அதன் பிறகுதான் அந்த வேடத்துக்கு பெண் குழந்தையான ராகவியை ஆண் குழந்தை போல மேக்கப் போட்டு நடிக்க வைத்துள்ளனர்.

மகேந்திரன் அறியாத வயதில் அப்படி பேசியது கூட பரவாயில்லை. ஆனால் இப்போது வளர்ந்து கதாநாயகன் ஆகவேண்டும் என ஆசைப்படும் நிலையிலும் கூட இதே போலதான் இயக்குனர்கள் வேலையில் மூக்கை நுழைப்பதாக அவர் மேல் புகார்கள் எழுந்துள்ளன. அதனால்தான் அவரால் ஹீரோவாக உருவாக முடியவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

vinoth

Recent Posts

“தற்குறிகள் ஆட்டம் ஆரம்பம்!” நடிகர் அருண் ராஜனின் வைரல் வீடியோ…! கொண்டாட்டமா…? அநாகரீகமா…? கொந்தளிக்கும் இணையவாசிகள்..!!

தமிழகத் தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் வெளியிட்ட…

17 seconds ago

“தவெக தொண்டர்களிடம் பாய்ந்த போலீஸ்!.. நடுரோட்டில் வெடித்த மோதல்.. பட்டாசுகளை பிடுங்கி எறிந்த போலீஸ்.. திருப்பூரில் பரபரப்பு”..!!!

தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) திருப்புமுனையை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக பல இடங்களில் பின்னடைவைச்…

8 minutes ago

விஜய் அலையில் சிக்கிய ரஜினி டயலாக்…? ‘காலம் சொன்ன பதில்’ இதுதானா…? பஞ்ச் வசனத்தை வைலராக்கும் நெட்டிசன்கள்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது…

11 minutes ago

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்… புதிய கூட்டணி அமைக்கிறார் விஜய்… வெளியானது ரகசியத் திட்டம்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டசபை'…

34 minutes ago

கிங் ஆவாரா விஜய்…? தவெக கையில் ஆட்சியின் சாவி…? தமிழக அரசியலில் பரபரக்கும் “தொங்கு சட்டசபை..” முழு விவரம் இதோ….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) அமைவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பரவலான…

36 minutes ago

BREAKING: கோட்டையை நோக்கி தளபதி?…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு விரைந்த திரிஷா..!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்களும்…

41 minutes ago