Categories: சினிமா

திருமணத்திற்கு பின் குலதெய்வம் கோயிலுக்கு சென்ற உமாபதி-ஐஸ்வர்யா தம்பதி.. பள்ளி மாணவர்களுக்கு செய்த உதவி.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும் அவரது கணவரான உமாபதி ராமையாவும் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு பின்னர் அங்கு இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராக கொடிக்கட்டி பரந்தவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பி ராமையாவும் தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகின்றார். இவரது மகன் உமாபதி ராவையா ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து ஒரு நல்ல வாய்ப்பை பெறுவதற்காக முயற்சி செய்து வருகின்றார். இவர் சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அர்ஜுன் மகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியை அர்ஜுன்தான் தொகுத்து வழங்கியிருந்தார். அதனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கின்றது. பின்னர் பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அர்ஜுன் கட்டி இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் ஜூன் 10ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இன்று திருமணத்தில் சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து சென்னை லீலா பேலஸில் ரிசப்ஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.

நடிகர் ரஜினிகாந்த், பாரதிராஜா, சிவகார்த்திகேயன். விஜய் சேதுபதி உங்கிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் பல அரசியல் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அதை தொடர்ந்து மிகச் சிறப்பாக மது விருந்து பார்ட்டியும் நடைபெற்றது. இதில் மணமகள் இருவரும் ஆடி பாடி நடனமாடி மகிழ்ந்திருந்தார்கள். இந்த வீடியோ மட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்நிலையில் புதுமண தம்பதிகளான ஐஸ்வர்யா மற்றும் உமாபதி ராமையா தங்களின் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து இருக்கிறார்கள். புதுக்கோட்டையில் இருக்கும் குலதெய்வ கோயிலுக்கு குடும்பமாக சென்று இருக்கும் இவர்கள் அங்கு வழிபாடு செய்து கொண்டனர்.  அங்கு இருந்த பலருக்கும் உணவு வழங்கியிருந்தார்கள். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், ஸ்கூல் பேக் போன்றவற்றை வழங்கியிருந்தார்கள். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

“கண்ணீர் விட்டு கதறிய இளையராஜா..! ஆரம்பகால நினைவுகளைப் பகிர்ந்து… பாக்யராஜுக்கு வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!”

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…

7 minutes ago

வியூஸுக்காக யூடியூபர் செய்த மோசமான காரியம்… டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி முடிவு… போக்சோ சட்டத்தில் கைது…!

சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும் சில யூடியூபர்களின்…

8 minutes ago

BREAKING: திமுகவில் இணையும் 2 MLA-க்கள்.. தமிழக அரசியலில் பரபரப்பு…!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரும்…

29 minutes ago

டெல்லி ஹோட்டலில் நள்ளிரவில் பயங்கரம்… இரு பெண்களை பளார் என அறைந்த சப்-இன்ஸ்பெக்டர்… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!

தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…

41 minutes ago

பரபரப்பு..! விவசாயியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட த.வெ.க நிர்வாகி.. அடுத்த நொடியே பதவியை பறித்த கட்சி தலைமை…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…

46 minutes ago

அடக்கடவுளே பயங்கரம்..! காரில் பெண்ணை குத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்த வாலிபர்… உடல் கருகி சாம்பலான கொடூரம்..!!

பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…

56 minutes ago