அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும் அவரது கணவரான உமாபதி ராமையாவும் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு பின்னர் அங்கு இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராக கொடிக்கட்டி பரந்தவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பி ராமையாவும் தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகின்றார். இவரது மகன் உமாபதி ராவையா ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து ஒரு நல்ல வாய்ப்பை பெறுவதற்காக முயற்சி செய்து வருகின்றார். இவர் சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அர்ஜுன் மகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியை அர்ஜுன்தான் தொகுத்து வழங்கியிருந்தார். அதனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கின்றது. பின்னர் பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து அர்ஜுன் கட்டி இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் ஜூன் 10ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இன்று திருமணத்தில் சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து சென்னை லீலா பேலஸில் ரிசப்ஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.
நடிகர் ரஜினிகாந்த், பாரதிராஜா, சிவகார்த்திகேயன். விஜய் சேதுபதி உங்கிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் பல அரசியல் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அதை தொடர்ந்து மிகச் சிறப்பாக மது விருந்து பார்ட்டியும் நடைபெற்றது. இதில் மணமகள் இருவரும் ஆடி பாடி நடனமாடி மகிழ்ந்திருந்தார்கள். இந்த வீடியோ மட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
இந்நிலையில் புதுமண தம்பதிகளான ஐஸ்வர்யா மற்றும் உமாபதி ராமையா தங்களின் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து இருக்கிறார்கள். புதுக்கோட்டையில் இருக்கும் குலதெய்வ கோயிலுக்கு குடும்பமாக சென்று இருக்கும் இவர்கள் அங்கு வழிபாடு செய்து கொண்டனர். அங்கு இருந்த பலருக்கும் உணவு வழங்கியிருந்தார்கள். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், ஸ்கூல் பேக் போன்றவற்றை வழங்கியிருந்தார்கள். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
View this post on Instagram