கைல சுத்தமா காசு இல்ல ; இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது… கண்கலங்கிய மணிமேகலை

By Deepika

Published on:

சன் ம்யூசிக்கில் தன் பயணத்தை ஆரம்பித்தவர் மணிமேகலை. மணிமேகலை என்றால் யார் என மக்களுக்கு தெரிய வந்த நேரத்தில் பேக் டான்சர் ஹுசைன் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார் மணிமேகலை. பெற்றோர் எதிர்ப்பை மீறி இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அந்த சமயத்தில் மணிமேகலை தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வஃங்கி வந்தார்.

Manimegalai

விஜய் டிவியில் கலக்க போவது யாரு, குக் வித் கோமாளி மூலம் மக்களுக்கு இன்னும் நெருக்கமானார். ஹுஸைனும் மணிமேகலையும் சேர்ந்து போடும் யூட்யூப் வீடியோக்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர் சமீபத்தில் தன்னுடைய சொந்த ஊரில் நிலம் வாங்கிய செய்தி கூட வைரலானது. இப்போது அங்கு பண்ணை வீடு கட்டி வரும் மணிமேகலை தான் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள் குறித்து கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

   
Hussain and manimegalai

அவர் கூறியுள்ளதாவது, என்னுடைய குடும்பம் நல்ல வசதியானது, நான் எதோ பொழுதுபோக்குகாக தான் சன் ம்யூசிக்கில் சேர்ந்தேன். நான் சம்பாரிக்கும் பணத்தையும் வீட்டில் கொடுத்து விடுவேன். நான் ஹுசைனை காதலித்த போது அவர் பேக் டான்சர் தான், என் வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை ஹுசைன் வீட்டிலும் ஒத்துக்கொள்ளவில்லை. நான் சம்பாரித்த பணமும் என் வீட்டில் லாக்காகி விட்டது.

கையில் சுத்தமாக பணமில்லை, அவ்வளவு கஷ்டம். நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கு கீழ் தான் அடகு கடை இருக்கும், ஹுசைன் மோதிரத்தை அடகு வைத்து தான் ஒரு மாதம் ஒட்டினோம். எனக்கு நிறைய ஈவண்ட் தொகுத்து வழங்க வாய்ப்பு வரும், ஆனால் கல்யாணத்திற்கு முன்பு என் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் கல்யாணத்திற்கு பின் நான் ஈவண்ட் போனேன், அதற்கு காரணம் ஹுசைன் மோதிரத்தை மீட்கவே.

Manimegalai about her struggle

ஒரு செயின் வாங்கி வந்தால், அன்று இரவே அடகு கடைக்கு போய் விடும், அப்படியெல்லாம் கஷ்டப்பட்டோம். ஆனால் ஹுசைன் எனக்கு துணையாக இருந்தார். அவர் அன்பு தான் என்னை இந்த உயரத்துக்கு கொண்டு வந்துள்ளது. இன்று என் அம்மா என்னுடன் சேர்ந்துவிட்டார். ஆனால் நாங்கள் பட்ட கஷ்டம் யாரும் பட கூடாது என கண்ணீர் மல்க பேசியுள்ளார் மணிமேகலை.

author avatar
Deepika