அடேங்கப்பா… நடிகர் தனுஷ் கட்டி இருக்கும் இந்த வாட்சின் விலை எவ்வளவு தெரியுமா…? கேட்டா பதறி போயிடுவீங்க…

By Begam on ஏப்ரல் 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். . இந்த ஆண்டு இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவான ‘வாத்தி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

   

இப்படத்தையடுத்து தனுஷ் தமிழில் தனது 50 வது திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘D50’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதையடுத்து இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் ‘வடசென்னை 2’, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

   

 

அதை தொடர்ந்து இந்தியில் பிரபல திரைப்படமான ‘ராஞ்சனா’, ‘அத்ரங்கி ரே’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் ஆனந்த் எல் ராய் உடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் தனுஷ். ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது குறிப்பிடதக்கது.

நடிகர் தனுஷ் ஒரு வாட்ச் பிரியர். இவரிடம் ஏகப்பட்ட luxurious வாட்ச்கள் உள்ளது. அந்தவகையில் தற்பொழுது நடிகர் தனுஷ் அணிந்திருக்கும் வாட்சின் விலை குறித்து தான் இதில் நாம் பார்க்க போகிறோம். அதாவது நடிகர் தனுஷ் தற்பொழுது அணிந்திருக்கும் இந்த வாட்ச் Audemars Piguet Royal Oak Perpetual Calendar,   பிராண்டை  சேர்ந்தது என்றும், அதன் விலை  Rs.2.18 கோடி என்றும் கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by The Brand Dude (@the_brand_dude)