நடிகர் விஷால், ரீமாசென் நடிப்பில் உருவான ‘திமிரு’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இவரின் முரட்டுத்தனமான நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இப்படத்தில் ‘ஏலே இசுக்கு’ என்ற இவரது டயலாக் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஈஸ்வரி கதாபாத்திரத்தில் அவர் விட்ட சவுண்டு இன்றுவரை காதில் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.
இவர் முதன் முதலில் நடிகர் விக்ரமின் ‘சாமுராய்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் குடும்பத்தை பார்த்துக் கொண்டு குழந்தையை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார்.
இதை தொடர்ந்து அவர் சினிமாவில் ‘அண்டாவ காணோம்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சூப்பர் என்ட்ரி கொடுத்தார். இவர் நடிப்பில் வெளியான ‘சுழல்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இதைத்தொடர்ந்து நடிகை ஸ்ரேயா ரெட்டி பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்து வரும் சலார் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுமட்டுமின்றி பல திரைப்படங்களில் கமிட்டாகி தற்பொழுது பிசியாக நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஸ்ரேயா ரெட்டி. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்பொழுது ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.