இளம் வயதிலேயே மறைந்த எம்ஜிஆரின் முதல் மனைவி தங்கமணி… கடைசியாக ஒரு தடவை முகத்தைக் கூட பார்க்க முடியாத சோகம்!

By vinoth on ஏப்ரல் 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால் படங்களில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் படத்தில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும், பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் முடிவு செய்வார்.

எம் ஜி ஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்வு அவர் எதிர்பார்த்ததை விட மிகச்சிறப்பாக சென்றது என்றாலும் அவரின் குடும்ப வாழ்வு அவ்வளவு மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. எம் ஜி ஆருக்கு மிக இளம் வயதிலேயே தங்கமணி என்ற கேரளாவைச் பார்கவி என்கிற தங்கமணி என்பவரைத் திருமணம் செய்துவைத்தார் அவரின் தாயார் சத்யபாமா.

   

அப்போது எம் ஜி ஆர் சிறு சிறு வேடங்களில் நடித்து கொஞ்சமாக சம்பாதிக்க ஆரம்பித்திருந்த நேரம். அப்போது உலகப் போர் வந்ததால் சென்னை தாக்கப்படலாம் என அச்சம் நிலவியது. அதனால் கர்ப்பமாக இருக்கும் தன் மனைவி இங்கு இருக்கவேண்டாம் என கேரளாவுக்கே அனுப்பி வைத்துள்ளார் எம் ஜி ஆர்.

   

கேரளாவுக்கே சென்றாலும் தங்கமணி எம் ஜி ஆருக்கு எதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தோடே இருந்துள்ளார். எம் ஜி ஆரையும் அங்கு வர சொல்லி கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் எம் ஜி ஆர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் அவரால் செல்லமுடியவில்லை. இந்நிலையில்தான் ஒரு நாள் தங்கமணிக்கு கருக்கலைந்து உடல்நிலை மோசமாகி உயிரிழந்துள்ளர்.

 

இதைக் கேட்டு அதிர்ச்சியாகி மனைவியைப் பார்க்க எம் ஜி ஆஅர் செல்வதற்கு முன்பே அவரின் உடலை அடக்கம் செய்துவிட்டார்களாம். கர்ப்பமாக இருந்த மனைவியின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லையே என்ற சோகத்தில் இருந்து பல நாட்கள் எம் ஜி ஆர் மீளவே இல்லையாம்.