2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களில் வென்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.), கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களும், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம். மற்றும் ஐ.யு.எம்.எல். ஆகிய கட்சிகளின் தலா 2 எம்.எல்.ஏ-க்களும் த.வெ.க-வுக்கு ஆதரவு அளித்ததால், அதன் பலம் 120 ஆக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்தத் தற்காலிக அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், த.வெ.க. அரசை வீழ்த்தத் தீவிர அரசியல் எதிரிகளான தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
த.வெ.க. அரசுக்கு எதிராக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைவர்கள் தொடர்ந்து கடுமையான கண்டனக் கணைகளை வீசி வரும் வேளையில், மக்கள் சார்ந்த முக்கியப் பிரச்சினைகளில் அவர்கள் காட்டி வரும் மெத்தனம் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. குறிப்பாக, நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கனவுகள் சிதைந்துள்ள நிலையிலும், சாமான்ய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் 4-ஆவது முறையாகப் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையிலும், இரு கட்சித் தலைவர்களும் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் மௌனம் காத்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடுமையான கேள்விகளைத் தனது எக்ஸ் (X) தளத்தில் எழுப்பியுள்ளார். “எப்போதும் பேசும்” நமது தலைவர்கள் தற்போது மட்டும் ‘டீப் சைலன்ஸ் மோடில்’ (Deep Silence Mode) இருப்பது ஏன் என்றும், மக்கள் பிரச்சினை என்று வரும்போது மௌனம் காக்கும் இவர்கள், அரசியல் என்று வந்துவிட்டால் மட்டும் மைக்கைப் பிடிக்கப் போட்டி போடுவது ஏன் என்றும் சாடியுள்ளார். மேலும், தமிழக மக்கள் கேட்கும் இந்த அமைதிக்கு என்ன காரணம் என்றும், அல்லது “மேலிருந்து” பேசக் கூடாது என்று ஏதேனும் ‘குரூப் கால் ஆர்டர்’ (Group Call Order) வந்துவிட்டதா என்றும் அவர் காரசாரமாகத் தன் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரயிலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பயணத்தின் போது 3 பேர் மட்டுமே…
மும்பை ஜோகேஷ்வரி ரயில் நிலையத்தில் செப்டம்பர் 16 அன்று நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர் நாகேஷ் மோஹிதே, ஓடிக்கொண்டிருந்த…
கர்நாடக மாநிலம் சன்னகிரி தாலுகாவிற்குட்பட்ட அஜ்ஜிஹள்ளி கிராமத்தில், சக்தி குமார் என்பவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.…
ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…
தெற்கு டெல்லியின் ஆர்கே புரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வேகமாக வந்த கார் ஒன்று,…
உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஈ-ரிக்ஷா ஒன்றிற்குள் பெண் ஒருவர் ஆபத்தான…