லோகேஷை பாத்து காப்பியா..? ரசிகர்களை நம்பவைத்து ஏமாற்றிய கமல் – மணிரத்னம்.. ‘Thug Life’ கான்சப்டே வேறையாம்-ல..

Spread the love

நடிகர் கமல்ஹாசன் இப்போது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் பான் இந்தியா படமான கல்கி படத்தில் 6 நாட்கள் ஷூட்டிங்கில் பங்கேற்று திரும்பி இருக்கிறார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பஞ்சாயத்து செய்து வருகிறார். இதற்கிடையே அவர் மணிரத்னம் இயக்கத்தில், தக்லைப் என்ற படத்தில் நடிக்க இருப்பதும், வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க இருப்பதும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுவிட்டது. இதற்கிடையே கடந்த நவம்பர் 7ம் தேதி, கமல் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் படத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக்லைப் படத்தின் பிரமோ வெளியானது.

இதில் ரங்கராஜ சக்திவேல் நாயக்கர், நான் காயல்பட்டணத்துக்காரன் என டயலாக் பேசிய கமல், கோணிச்சாக்கு போன்ற ஒரு வித்யாசமான கெட்டப்பில் சிலரை அடிப்பது போன்ற பிரமோ வெளியானது. இதை பார்த்த பலரும், 1800களில் வாழ்ந்த தக்ஸ் பற்றிய மக்களின் கதை என்றும், இது அந்த பீரியடில் நடந்த சம்பவங்களை வைத்து படமாக்கப்படும் கதையாக இருக்கும் என்றும் பேசப்பட்டது. மேலும், இது நாயக்கர் படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் அல்லது, சக்திவேல் என்ற பெயர் வருவதால், தேவர் மகன் படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்றும் பலவிதமான யூகங்களின் அடிப்படையில் பேசப்பட்டது.

ஆனால் இப்போது ஒரு உண்மை வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தின் கதை 1800களில் நடந்தது அல்ல. சமகால சம்பவங்களை வைத்து எடுக்கப்படும் அதிரடி ஆக்சன் படம்தான். இதில் எந்தவிதமான தக்ஸ் வாழ்க்கை பின்னணி கதையும் இருக்காது. அது படத்தின் பிரமோ ரசிகர்களை கவனத்தை கவர வேண்டும் என்பதற்காக அப்படி வித்யாசமாக எடுக்கப்பட்டது. அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் ஆரம்பிக்கலாங்களா என கமல் கேட்பது போன்றும், அனைவரும் கறிவிருந்து சாப்பிடுவது போன்றும் ஒரு பிரமோ வந்தது. அப்படி ஒரு காட்சியே படத்தில் வரவில்லை. அதுபோல் இதுவும் ஒரு பொய்யான பிரமோதான். மணிரத்னம் இயக்கும் தக்லைப் படத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இது ரசிகர்களை மிக பெரிய அளவில் ஏமாற்றமடையச் செய்திருக்கிறது.

admin

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

5 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

5 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

6 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

6 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

7 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

7 மணத்தியாலங்கள் ago