Categories: சினிமா

முத்து, மதராசப்பட்டிணம், KGF, போன்ற பல திரைப்படங்கள் எடுக்கப்பட்ட அரண்மனை இது தான்.. மிரளவைக்கும் தகவல்கள்…

Spread the love

முத்து, மதராசபட்டினம், KGF  போன்ற பல திரைப்படங்களில் பிரம்மாண்டமான அரண்மனையை பார்த்து ரசித்திருப்போம். இந்த அரண்மனைக்கு ஒரு நாள் சென்று வந்தால் எப்படி இருக்கும்? எனவும் யோசித்திருப்போம். ஆனால் இந்த அரண்மனை எங்கே இருக்கிறது ? இந்த அரண்மனையை பற்றி முழுதாக உங்களுக்கு தெரியுமா? வாங்க இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘முத்து’ திரைப்படம், மேட்டுக்குடி, பிரியமானவளே, மதராசபட்டினம் ,காதலன், ஜோடி ,பையா , KGF என பல்வேறு திரைப்படங்களில் அமைந்த அரண்மனை தான் லலிதா பேலஸ். இந்த அரண்மனை கர்நாடகாவில் உள்ள மைசூரில் அமைந்துள்ளது. மைசூர் நகரத்தில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம் தான் லலிதா பேலஸ். இந்த அரண்மனை E.W. Fritchley என்பவரால் வடிவமைக்கப்பட்டது என்றும்,  இது மைசூர் மகாராஜாவால் இந்தியாவின் வைஸ்ராய்க்காக கட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

மைசூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் சாமுண்டி மலையின் அடிவாரத்தில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ள இந்த அரண்மனையில் பல்வேறு படங்களின் சூட்டிங்களும் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த அரண்மனையில் பல்வேறு சொகுசு வசதிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. விருந்தினர்கள் தங்குவதற்கு பல்வேறு நவீன வசதிகளும் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த அரண்மனையை ஒரு சொகுசு பாரம்பரிய ஹோட்டலாகவும் மாற்றியுள்ளனர். இங்கு ஷூட்டிங் இருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பல்வேறு திரைப்படங்களும் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘முத்து’ திரைப்படத்தில் அப்பா ரஜினி தனக்கு சொத்து எதுவும் வேண்டாம் என்று தன் குழந்தை ஒப்படைத்து விட்டு செல்லும் காட்சி, இந்த அரண்மனையில் தான் எடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ‘லிங்கா ‘ திரைப்படத்தில் காட்டப்பட்ட அரண்மனையும் இதுதான். ‘மதராசபட்டினம்’ திரைப்படத்தில் எமி ஜாக்சன் தங்கி இருக்கும் அரண்மனையும் இதுதான். ‘காதலன்’ திரைப்படத்தில் பிரபுதேவா முதன் முதலில் நக்மாவை பார்க்கும் காட்சி எடுக்கப்பட்டதும் இந்த அரண்மனையில் தான். இப்படி பல்வேறு திரைப்படங்களில் பார்த்த இந்த அரண்மனையை நம்ம பார்க்க வேண்டாமா? மைசூர் பக்கம் போனா கண்டிப்பா மிஸ் பண்ணாம பாத்துட்டு வந்துடுங்க.

Begam

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

6 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

7 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

7 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

8 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

8 மணத்தியாலங்கள் ago