திக் திக்…! முதல்வர் விஜய் வாகனம் அருகே பாய்ந்த நபர்… சற்றுமுன் பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறந்து வைப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய், சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் நோக்கித் தனது கான்வாய் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு விபத்து தவிர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் சென்ற வாகனம் வேகமாக வந்துகொண்டிருந்த வேளையில், திடீரென நபர் ஒருவர் சாலையைக் கடப்பதற்காக வாகனத்திற்கு மிக அருகே பாய்ந்து வந்து விபத்தில் சிக்க நேர்ந்தது. இதைக் கண்ட முதல்வர் வாகனத்தின் ஓட்டுநர், தனது சாதுர்யத்தால் கண்ணிமைக்கும் நொடியில் வாகனத்தை லாவகமாக வளைத்து திருப்பினார். அதே நேரத்தில், பாதுகாப்பு வாகனத்தில் வந்த கமாண்டோ பாதுகாவலர்களும் சாதுர்யமாகச் செயல்பட்டு அந்த நபரைப் பாதுகாப்பாக மீட்டு அப்புறப்படுத்தினர்.

ஓட்டுநரின் சுதாரிப்பான நடவடிக்கையினாலும், பாதுகாவலர்களின் அதிவேக மீட்பினாலும் பெரும் அசம்பாவிதம் நல்வாய்ப்பாகத் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Devi Ramu

Recent Posts

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

4 minutes ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

8 minutes ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

29 minutes ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

36 minutes ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

40 minutes ago

அடப்பாவி… நீயெல்லாம் மனுஷனா?… குடும்ப தகராறில் மாமனாரை… கட்டையால் அடித்த கொடூரம்… தடுக்க வந்த மனைவிக்கு தர்ம அடி… ஆந்திராவை உலுக்கிய கணவனின் வெறிச்செயல்…!

ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு…

41 minutes ago