விருதுநகர் மாவட்டம் அருகே மாணிக்கம் நகரை சேர்ந்த மாரீஸ்வரி (22) என்பவருடைய கணவர் மருதுபாண்டி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தன் ஆறு வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே மாரீஸ்வரி கடந்த ஆண்டு செல்வம் (32) என்ற நபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் விருதுநகரில் வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் மாரீஸ்வரியின் ஆறு வயது மகன் மாரீஸ்வரியின் பெற்றோர் வீட்டில் தங்கி ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். திருவிழாவிற்காக மாரீஸ்வரி தன்னுடைய மகனை அழைத்து வந்த நிலையில் வீட்டிலிருந்த தனது மகன் திடீரென மாயமானதால் உடனே போலீசில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வந்த நிலையில் அருகே உள்ள காட்டுப் பகுதியில் கழுத்து மற்றும் முக உள்ளிட்ட பகுதிகளில் ரத்த காயத்துடன் சிறுவன் நீக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். இதனைத் தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் மாரீஸ்வரியின் இரண்டாவது கணவர் வீட்டிலிருந்த சிறுவனை அழைத்துச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறுவனின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது சிறுவனை சத்தம் போடக்கூடாது என்பதற்காக வாயில் பேனாவை குத்தி வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று உள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து எதற்காக சிறுவனை கொலை செய்ய முயற்சித்தார் என்ற தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 6 வயது மகனை வளர்ப்பு தந்தை கொடூரமாக கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு நிலம் வாங்குபவர்களுக்கு எளிதாக பட்டா மாறுதல் செய்யும் வகையில் மென்பொருளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை உட்பிரிவு…
ராகு மற்றும் செவ்வாய் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம் என்பது ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரக அமைப்பாகும்.…
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…
தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…
தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…