நிலம் வாங்குறவங்களுக்கு ஜாக்பாட்…! இனி ஆபீஸ் அலைய தேவையில்லை… பத்திரம் முடிஞ்சா ‘ஆட்டோமேட்டிக்’ பட்டா… தமிழக அரசின் அதிரடி உத்தரவு…!!

Spread the love

தமிழக அரசு நிலம் வாங்குபவர்களுக்கு எளிதாக பட்டா மாறுதல் செய்யும் வகையில் மென்பொருளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை உட்பிரிவு இல்லாத சொத்துக்களை வாங்கும்போது, வில்லங்கங்கள் இல்லாமல் இருந்தால் மட்டுமே தானியங்கி முறையில் பட்டா மாறுதல் வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையில் இருந்த சில இடர்ப்பாடுகளைக் களைந்து, பொதுமக்கள் வட்டாட்சியர் அல்லது சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் வகையில் இந்த புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

புதிய மாற்றங்களின்படி, நிலத்தை விற்பனை செய்யும்போது உரிமையாளருடன் சேர்ந்து அவரது மனைவி, மகன் அல்லது மகள் போன்ற குடும்ப உறுப்பினர்கள் கையொப்பமிட்டாலும் இனி தானியங்கி பட்டா மாறுதல் சேவையைப் பயன்படுத்தலாம். அதேபோல், நில உரிமையாளர் பொது அதிகார பத்திர முகவர் மூலம் நிலத்தை விற்பனை செய்யும்போது பெயர் பொருத்தம் இல்லை என்றாலும், அது செல்லத்தக்க பொது அதிகாரம் என்பதால் இனி தானியங்கி பட்டா வழங்கப்படும். மேலும், வாங்குபவருக்கு அதே கிராமத்தில் ஏற்கனவே நிலம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், காலவிரயத்தைத் தவிர்க்கும் வகையில் தானாகவே அடுத்த புதிய பட்டா எண் ஒதுக்கப்படும்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகளின்படி, மென்பொருள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த 15 நாட்களுக்குள் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் பெரும்பாலான உட்பிரிவு அல்லாத நிலங்களுக்கு, பொதுமக்கள் எங்கும் நேரில் செல்லத் தேவையின்றி தானியங்கி முறையிலேயே பட்டா மாறுதல் எளிதாகக் கிடைக்கும்.

Swetha

Recent Posts

அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு…. யாருடைய குரல்வளையையும் நெறிக்கல…. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கொடுத்த ‘ஷாக்’ ரியாக்ஷன்….!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்று வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் சோதனை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப்…

7 minutes ago

அமைச்சர் பதவியில் இருந்து சரத் நீக்கம்?…. லண்டனில் இருந்து உத்தரவிட்ட விஜய்… தாம்பரம் டெண்டர் ஊழலில் அடுத்த விக்கெட்…..!

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் கோருவதற்கு முன்பே ரூ. 45.9 லட்சம் மதிப்பிலான அழகுபடுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்ட விவகாரம், தமிழக…

14 minutes ago

“அமைச்சர் பதவிக்காகத் தான் கூட்டணியா?”…. 2 சீட் ஜெயிச்சு ஒரு அமைச்சர் பதவி… விசிகவை மேடையில் வறுத்தெடுத்த பிரேமலதா விஜயகாந்த்….!

தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் தான் திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகியதாக வெளியான கருத்துக்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…

17 minutes ago

“அதிமுகவை கழற்றிவிட்ட பாமக?”…. தேர்தலில் போட்டி இல்லை… சற்றுமுன் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு…!

தமிழக அரசியலில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் பாமக…

21 minutes ago

“ராகுலை பிரதமராக ஏற்காவிட்டால் கூட்டணியே வேண்டாம்”…. காங்கிரஸ் செல்வப்பெருந்தகை அதிரடி எச்சரிக்கை…. அரசியலில் அடுத்த பரபரப்பு….!

ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராகக் கூட்டணிக் கட்சிகள் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவர்…

26 minutes ago

விஜய் சேதுபதியை மிரட்டுவதை நிறுத்துங்கள்…! “ஜனநாயகன்’ படம் நடிச்சா மட்டும் போதாது…” நடிகர் விஜய்யையும் தவெகவையும் வெளுத்து வாங்கிய சீமான்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்து விஜய் சேதுபதி பேசிய பொதுவான கருத்து, தமிழக வெற்றிக் கழகத்…

57 minutes ago