“விஜய் ஆட்சிக்கு 6 மாதமே கெடு.. அப்புறம் ஆட்சி இருக்காது – இருக்கவும் விடமாட்டோம்”… நடுங்க வைக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் பகிரங்க சவால்…..!

Spread the love

தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட அவரை, மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வைத்து சுமார் 6 மணி நேரம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதன் பின்னர், மாலை 6 மணியளவில் மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்பட்டார்.

மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களையும் சவால்களையும் முன்வைத்தார். அப்போது அவர், “திமுகவை மிரட்டிப் பணிய வைத்துவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். என்னிடம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கொள்ளுமாறு கூறினார்கள். அப்படிச் செய்தால் முழு ஆதரவு தருவதாகவும் ஆசை காட்டினார்கள். ஆனால், இன்று வந்த புதிய கட்சிக்கு எல்லாம் நாங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை,” என்று ஆக்ரோஷமாகப் பேசினார்.

மேலும், தன் மீதான கைது நடவடிக்கை குறித்துப் பேசிய அவர், “என்னிடம் குதிரை பேரம் இல்லை, ஒட்டக பேரமே பேசப் பார்த்தார்கள்; ஆனால் அது ஒருபோதும் நடக்காது. நான் காசு போட்டு முதலமைச்சராக வரவில்லை. என் கட்சித் தலைவர் ஸ்டாலினின் எண்ணங்களை நிறைவேற்றும் சாதாரண தொண்டனாகவே செயல்படுகிறேன். சட்டமன்ற உறுப்பினர் என்பதால் வரும் 10-ஆம் தேதி போலீசில் ஆஜராகி விளக்கம் அளிப்பதாக என் வழக்கறிஞர் கூறியிருந்தார். அதற்குள் உயர்நீதிமன்றத்தில் நாங்கள் முன்ஜாமீன் கோரிய நிலையில், எப்படியாவது என்னை உள்ளே தள்ளி பயம்காட்ட வேண்டும் என்ற நோக்கில் அவசரகதியாகக் கைது செய்துள்ளனர். இந்த சலசலப்புக்கு எல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்,” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து தற்போதைய ஆட்சிக்குச் சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன், “இந்த ஆட்சி ரொம்ப நாள் நீடிக்காது. அதிகபட்சம் 6 மாதங்கள் தான் இருக்கும். நான் சவால் விட்டுச் சொல்கிறேன், என் சொந்த ஊரான திருச்செந்தூரில் வீற்றிருக்கும் சுப்பிரமணியசுவாமி மீது சத்தியமாக இந்த ஆட்சி 6 மாதத்திற்கு மேல் இருக்காது, இருக்கவும் விடமாட்டோம்,” என கொந்தளித்தார். விசாரணையின் போது போலீசார் தாக்கினார்களா என்ற கேள்விக்கு, “என்னை யாரும் தாக்கவில்லை, ஆனால் மிரட்டுகிறார்கள்; என்னை தாக்கினால் நானும் திரும்பத் தாக்குவேன்,” என்று ஆவேசமாக பதிலளித்தார். அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த அதிரடிப் பேட்டி தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“அண்ணாமலைக்கு 96% சான்ஸ் இல்லையாம்!”… ஜூலை 12-ல் நடக்கப்போகும் ‘அந்த’ சம்பவம்… அதிர வைக்கும் கணிப்பு…!

தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…

5 minutes ago

‘இனி சும்மா விடமாட்டோம்’… சவுதிக்கு ஏமன் ஹவுதிகள் விடுத்த பகீர் வார்னிங்… வான்வெளியில் நடந்த நடுக்கடல் பரபரப்பு…!

ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…

15 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் விசித்திரம்.. உயிருடன் பாம்பை விழுங்கும் ஒட்டகங்கள்…! அரபு நாடுகளின் பகீர் பின்னணி…!

பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…

25 minutes ago

ஆடு திருடிய வழக்கில் கைதானவருக்கு ‘அரசு வழக்கறிஞர்’ பதவி… திருப்பத்தூரில் வெடித்த நிஜ ‘சதுரங்க வேட்டை’…!

திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக்…

25 minutes ago

ச்சீ… ஆண்களுக்கே இந்த நிலைமையா…? – கண்ணிமைக்காமல் துரத்திய கண்கள்… ஓடும் ரயிலில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…! வைரல் வீடியோ…!!

சென்னையில் உள்ள ஒரு ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக ஆண் பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து 20…

29 minutes ago

நடுரோட்டில் மின்கம்பத்தில் கட்டப்பட்ட திருடர்கள்… அருகில் இருந்த மர்ம கடிதம்…! மெக்ஸிகோவை உலுக்கும் ‘பேட்மேன்’ நிழல் உலக ஆட்டம்… பாராட்டும் நெட்டிசென்கள்…!!

மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரினோ பகுதியில், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களை ஒரு…

33 minutes ago