சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த கமலக்கண்ணன் (45) என்பவர், போலிப் பத்திரங்கள் தயாரித்து நிலங்களை அபகரித்து, அவற்றை வங்கிகளில் அடமானம் வைத்து கோடி கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்வதில் கைதேர்ந்தவர் ஆவார். தமிழகத்தில் நிலம் மற்றும் ஆவணங்களின் மதிப்பு மிக அதிகமாக இருக்கும் சென்னைப் பகுதிகளில் இவர் பல மோசடிகளை அரங்கேற்றியுள்ளார்.
இவரால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள், வங்கிகள் எனப் பலர் இருக்கின்றனர். கமலக்கண்ணன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஏற்கனவே 13 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பலமுறை சிறைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவர் மீது புதிதாக இரண்டு வழக்குகளைப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.
மயிலாப்பூரைச் சேர்ந்த தாராசந்த் என்பவருக்குச் சொந்தமான நிலத்தைப் போலி பத்திரங்கள் மூலம் அபகரித்து, அந்த நிலத்தை ஒரு தனியார் வங்கியில் அடமானம் வைத்து ரூ. 3 கோடி மோசடி செய்த வழக்கில் கமலக்கண்ணன் முக்கியக் குற்றவாளி எனப் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இதேபோல், சோழிங்கநல்லூரில் உள்ள 12,000 சதுர அடி நிலத்தைப் போலியாகப் பத்திரப் பதிவு செய்து, சென்னை எழும்பூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் அடமானம் வைத்து ரூ. 5 கோடியைச் சுருட்டிய மற்றொரு வழக்கிலும், போலிப் பத்திரங்களைத் தயாரித்துக் கொடுத்த முக்கியக் குற்றவாளியாக இவரே இருந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…