தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் நொடிக்கு நொடி பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் ஸ்டாலின் இந்த முறை ஆட்சியை தக்க வைத்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகின்றார். ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு சில கட்சிகள் கூடுதல் தொகுதிகளையும் ஆட்சியில் பங்கு எனவும் குரல் எழுப்பி வருகின்றன. இந்த விவகாரம் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கலாகவே மாறி உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுகவிலிருந்து விலகி புதிய கட்சியை தொடங்கிய மல்லை சத்யா, தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. திமுகவின் கூட்டணியில் மதிமுகவும் உள்ளது. ஆனால் கூட்டணியில் மதில் மேல் பூனையாகத்தான் மதிமுக எப்போதும் இருக்கிறது. அவர்கள் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அமைச்சர் முருகன் மறைமுகமாக தெரிவித்துள்ளார். நிச்சயமாக மதிமுக கூட்டணி மாறுவதற்கான சூழல் உள்ளது என்று மல்லை சத்யா பேசியுள்ளார். மேலும் துறை வைகோ அவ்வளவு பரிசுத்தமானவர் என்றால் எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு தனித்து நின்று தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார். சமீபகாலமாகவே வைகோ திமுகவுக்கு எதிராக பல விவகாரங்களில் குரல் கொடுத்து வரும் நிலையில் தற்போது மல்லை சத்யாவின் இந்த பேச்சு புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…