Categories: சினிமா

பஸ்ல எனக்கு ஒரு சம்பவம் நடந்துச்சு.. அதனால 3 வருஷம் பஸ்ல போறதையே நிறுத்திட்டேன்.. ஓபனாக பேசிய மகாராஜா பட நடிகை..!!

Spread the love

பிரபல நடிகரான விஜய் சேதுபதி நித்திலன் இயக்கத்தில் உருவான மகாராஜா படத்தில் நடித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஜா படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படம் ஆகும். படத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடிகை சஞ்சனா நடித்துள்ளார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஞ்சனா சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் பெண்களுக்கு சில கசப்பான அனுபவங்கள் இருக்கும் உங்களுக்கு அப்படி ஏதாவது நடந்திருக்கிறதா என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்கிறார். அதற்கு பதில் அளித்த சஞ்சனா நான் பேருந்தில் கூட இப்படி ஒரு கசப்பான அனுபவத்தை சந்தித்தேன். கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போது பேருந்தில் சென்றேன்.. அப்போது எனக்கு ஒரு சம்பவம் நடந்தது.

அதிலிருந்து பேருந்தில் செல்வதற்கு எனக்கு மிகவும் பயமாக இருந்தது. சுமார் மூன்று வருடங்கள் நான் பேருந்தில் பயணிக்கவில்லை. வீட்டில் இருந்து வாகனத்தை எடுத்துக்கொண்டு தான் கல்லூரிக்கு சென்று வந்தேன். மகாராஜா படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் போது தைரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக நானே என்னை தயார் படுத்திக் கொண்டேன். சொல்லப்போனால் மகாராஜா படத்தில் நடிப்பதற்காக தான் நான் வெளியவே வந்தேன். அதுவரை எனக்குள் பயம் இருந்தது.

வாழ்க்கையில் இந்த அனுபவங்களை எல்லாம் சமாளித்து தான் ஆக வேண்டும் என என்னை நானே தைரியப்படுத்திக் கொண்டேன். அதன் பிறகு தான் தைரியமாக பேருந்துகளில் பயணம் செய்ய ஆரம்பித்தேன். நம்மால் ஏன் தைரியமாக இருக்க முடியாது ஏன் இதை சமாளிக்க முடியாது என எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். பேருந்தில் நடந்த கசப்பான அனுபவத்திலிருந்து நான் மகாராஜா படத்திற்காக தான் வெளியே வந்தேன் என ஓப்பனாக பேசியுள்ளார்.

admin

Recent Posts

“எனக்குத்தான் ஃபர்ஸ்ட் வாய்ப்பு வேணும்”…. சபாநாயகரிடம் எகிறிய சி.வி. சண்முகம்… அவையில் அரங்கேறிய பரபரப்பு…. பதறிய அதிமுக எம்.எல்.ஏ-க்கள்….!

தமிழ்நாடு சட்டமன்றத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வர வலியுறுத்தி அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர்…

6 minutes ago

“10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்…” தமிழக அஞ்சல் துறையில் 2,118 மெகா அரசுப் பணியிடங்கள்… முழு விவரம் இதோ…!!

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,118 கிராமின் தாக் சேவக் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.…

9 minutes ago

“எங்களை ஓடாதீங்கன்னு சொல்லிட்டு… நீங்க தான் ஓடுறீங்க முதலமைச்சரே”….. சட்டப்பேரவையில் விஜய்யை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தவெக அரசு…

10 minutes ago

“2029 பிரதமர் ரேஸ்”…. டெல்லியை அதிர வைக்கும் விஜய்யின் ரகசிய ‘மாஸ்டர் பிளான்’…. அறிவாலயக் கதவை மீண்டும் தட்டும் காங்கிரஸ்….!

2029 நாடாளுமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் தேசிய அரசியல் நகர்வுகள், இந்திய அரசியலில்…

14 minutes ago

“200 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த பெண் குழந்தை…” மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பிரம்மாண்ட வரவேற்பு… நெகிழ்ச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த தஹிபாலே குடும்பத்தில் கடந்த நான்கு தலைமுறைகளாக, அதாவது சுமார் 200 ஆண்டுகளாக ஆண்…

17 minutes ago

மெரினா சாலையில் சட்டென நின்ற கான்வாய்….. முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த கூட்டம்.. பதறிய கமாண்டோக்கள்… உச்சக்கட்ட பதற்றம்….!

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று காலை தமிழக முதல்வர் விஜய்யின் கார் கான்வாய் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக…

18 minutes ago