தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தவெக அரசு மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தவெக அரசின் கடந்த 116 நாட்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்களைப் பட்டியலிட்டதுடன், திமுக ஆட்சியில் பணியாற்றிய அதிகாரிகளுக்கே தற்போது முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், உறுப்பினர்களின் அனைத்து கேள்விகளுக்கும் வரும் திங்கள்கிழமை விரிவாகப் பதிலளிக்க உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தான் பதிலளிக்கும் போது எதிர்க்கட்சியினர் அவையை விட்டு வெளியேறக் கூடாது என்று கேட்டுக்கொண்டதுடன், அதை வாக்குறுதியாகத் தருமாறும் கூறிவிட்டு அவையிலிருந்து புறப்பட்டார்.
முதலமைச்சர் வெளியேறியதும், “வரும் திங்கள்கிழமை எங்களை ஓடக் கூடாது என்று சொல்லிவிட்டு, முதலமைச்சரே அவையை விட்டு ஓடுகிறாரே” என உதயநிதி ஸ்டாலின் கிண்டலாகக் குறிப்பிட்டார். மேலும், மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு வரும் திங்கள்கிழமை எந்தவித திசைதிருப்பலும், குட்டிக் கதைகளும் இல்லாமல் கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், காவல் துறையை நவீனமயமாக்க ரூ.212 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் அடுத்த 5 ஆண்டுகளில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டிருந்தார். பணிக்காலத்தில் உயிரிழக்கும் காவலர்களுக்கான கருணைத் தொகையை ரூ.30 லட்சமாக உயர்த்துதல், புதிய வாகனங்கள் வாங்குதல் மற்றும் தடய அறிவியல் ஆய்வகங்களை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களும் இதில் அடங்கும்.
ஈரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு…
தமிழக அரச திட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசை ‘தாய் மாமன்…
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய உரையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். முதலமைச்சரின் நேரடிக்…
தென்னிந்திய மாநிலங்களுக்கிடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், அண்டை மாநிலமான கர்நாடகா ஒரே நாளில்…
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில், 19 வயது மாணவி ஒருவர் கட்டிடத்தின்…
அலங்காநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசிய கருத்துகள், தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில் தங்களின்…