“நீட் ரகசியம்னு 5 வருஷமா உதயநிதி சொன்னதுதான் பெரிய காதுகுத்து”…. சட்டப்பேரவையில் உதயநிதியை பந்தாடிய ராஜ்மோகன்…!

Spread the love

தமிழக அரச திட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசை ‘தாய் மாமன் காது குத்தும் திட்டம்’ என விமர்சித்திருந்தார். அவரது இந்த விமர்சனத்திற்குத் தமிழக அரசு சார்பில் கடுமையான பதிலடியை வழங்கியுள்ளார் அமைச்சர் ராஜ்மோகன். “உண்மையில் நீட் தேர்வை ஒழிப்பதற்கான ரகசியம் எனக்குத் தெரியும் என்று உதயநிதி கூறியதுதான் தமிழக மக்களுக்குச் செய்யப்பட்ட மிகப்பரிய காதுகுத்து” என்று அவர் சாடினார். மேலும், கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் மெரினா கடற்கரையை முடக்கிப் பூட்டு போட்டதில்தான் அவர்கள் ‘முனைவர் பட்டம்’ பெற்றிருப்பதாகத் தனது காரசாரமான பதிலடியைத் தொடங்கினார்.

கடந்த கால திமுக ஆட்சியையும் தற்போதைய விஜய் அரசின் நிர்வாகத்தையும் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தற்போதைய ஆட்சியில் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறது என்று சுட்டிக்காட்டினார். “கடந்த திமுக ஆட்சியில் விருகம்பாக்கத்தில் நடந்த அவர்களின் பொதுக்கூட்டத்திலேயே ஒரு பெண் காவல் துறை அதிகாரியிடம் திமுக உறுப்பினர் சீண்டலில் ஈடுபட்டார். சொந்தக் காவல்துறையினருக்கே பாதுகாப்பற்ற ஒரு ஆட்சியை நடத்திவிட்டு, அவர்கள் எங்களைப் பார்த்து கேள்வி எழுப்புவது வேடிக்கையானது. ஆனால், எங்களது ஆட்சியில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தவறு செய்தால் குற்றவாளிகள் மீது விஜய் அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் உறுதியளித்தார்.

சட்டம் – ஒழுங்கைப் பராமரிப்பதில் தமிழ்நாடு தற்போது மிகச் சிறந்த நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், ஆளுங்கட்சியின் தலையீடு இல்லாத நேர்மையான நிர்வாகமே தற்போதைய ‘விஜய் சர்கார்’ என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தைப் பாதுகாப்பது மிக முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி, பெற்றோர் பெயர் முதற்கொண்டு அனைத்தையும் முதல் தகவல் அறிக்கையில் (FIR) வெளியிட்டு மிகப்பெரிய தவறைச் செய்தது அன்றைய திமுக அரசு” என்று கூறி, திமுகவின் நிர்வாகத் தோல்விகளைப் பட்டியலிட்டார்.

Nanthini

Recent Posts

மனைவியின் பிறந்தநாளன்றே அரங்கேறிய சோகம்…! “தவறு நடந்திருந்தால் மன்னித்து விடு… குட்பை…” மெசேஜ் அனுப்பி சாப்ட்வேர் ஊழியர் தற்கொலை… பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி தேவினகர் பகுதியைச் சேர்ந்தவர் முலுகுரி ரமேஷ் (40). மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர்,…

10 minutes ago

அய்யய்யோ கடவுளே… கண் இமைக்கும் நேரத்தில்… சாலைக்கு ஓடிய குழந்தையால்… நேர்ந்த கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சாலையோரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது ஆபத்தானது. குழந்தைகள் விளையாடும் உற்சாகத்தில் கவனமின்றி திடீரென சாலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது அவர்களின்…

17 minutes ago

“தடம்புரண்ட பைக்… பின்னாலேயே மோதிய கார்…” வேலை முடிந்து வீடு திரும்பிய தம்பதி பலி…. பெரும் சோகம்…!!

தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சிக்னல் அருகே புதன்கிழமை மாலை 5 மணி அளவில் கோர…

20 minutes ago

ஐயோ கடவுளே… கணவனை அடித்துக் கொன்றுவிட்டு… வழிப்பறி நாடகம் போட்ட மனைவி… கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?… பகீர் பின்னணி…!

சேலம் மாவட்டம் ஓமலூர் - சங்ககிரி சாலையில் காரில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக்…

26 minutes ago

அட இத யாராவது கவனிச்சீங்களா?… அமைச்சர் ரமேஷ் கையில் இருக்கும் கருவியில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?…. வெளிவந்த சீக்ரெட்….!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் ஆடைகள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை பெரும்பாலும் பொதுமக்கள்…

47 minutes ago

“இந்தியாவுக்கு அமெரிக்கா வைத்த செக்”…. மோடி-ஈரான் அதிபர் சந்திப்பால் கடுப்பான டிரம்ப் நிர்வாகம்…. சட்டென களத்தில் இறங்கி அமெரிக்கா போட்ட போடு….!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத்…

60 minutes ago