மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த தஹிபாலே குடும்பத்தில் கடந்த நான்கு தலைமுறைகளாக, அதாவது சுமார் 200 ஆண்டுகளாக ஆண் குழந்தைகள் மட்டுமே தொடர்ந்து பிறந்து வந்துள்ளனர். இதனால் தங்கள் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையாவது பிறக்காதா என்று அக்குடும்பத்தினர் பல தலைமுறைகளாக ஏங்கித் தவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அக்குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியினருக்குச் சமீபத்தில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்த குடும்பத்தினர் அக்குழந்தைக்கு ‘கார்கி’ எனப் பெயரிட்டனர். மருத்துவமனையில் இருந்து தாயையும் சேயையும் வீட்டிற்கு அழைத்து வர சிறப்பு ஏற்பாடுகளைச் செய்தனர்.
கடந்த ஆகஸ்ட் 31 அன்று மருத்துவமனையின் வாசலில் மலர்களால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட குதிரை தேரை தயார் செய்து, தாயையும் குழந்தையையும் அதில் ஏற்றி மேளதாளங்கள் முழங்க, வழியெங்கும் நடனமாடி ரத ஊர்வலமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பெண் குழந்தைகளைப் பாரமாக நினைக்கும் சமூகத்திற்கு மத்தியில், பெண் பிறப்பைக் கொண்டாட வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த ஊர்வலத்தை நடத்தியதாகக் குழந்தையின் தந்தை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இக்க கொண்டாட்டத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு…
தமிழக அரச திட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசை ‘தாய் மாமன்…
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய உரையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். முதலமைச்சரின் நேரடிக்…
தென்னிந்திய மாநிலங்களுக்கிடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், அண்டை மாநிலமான கர்நாடகா ஒரே நாளில்…
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில், 19 வயது மாணவி ஒருவர் கட்டிடத்தின்…
அலங்காநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசிய கருத்துகள், தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில் தங்களின்…