“அப்பா பேச்சை மகன் கேட்கல”…. நீதிபதி கேட்ட ஒற்றை கேள்வி… துக்கம் தொண்டை அடைக்க ராமதாஸ் சொன்ன அந்த ஒரு பதில்….!

Spread the love

பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸை அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்யக் கோரியும், மாம்பழச் சின்னத்தை முடக்கக் கோரியும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டதாகவும், போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து அவர் பதவியில் நீடிப்பதாகவும் ராமதாஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், கட்சி விவகாரங்களில் தீர்வு எட்டப்படும் வரை தமிழகத் தேர்தல் அறிவிப்பைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான இந்த மோதலைக் கண்டு வியப்பு தெரிவித்தது. விசாரணையின் போது, “தந்தை சொல்லை மகன் கேட்பதில்லையா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர், “தந்தை சொல்வதை மகன் கேட்பதில்லை” என்று பதிலளித்ததோடு, 35 வயதிலேயே அன்புமணிக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்த தந்தையிடமிருந்து கட்சியை அவர் அபகரித்துக் கொண்டதாக வாதிட்டார்.

மறுபுறம், அன்புமணி தரப்பு வழக்கறிஞர் இந்த வாதங்களை மறுத்ததுடன், ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் உள்ள கையெழுத்துகளே சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகத் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உட்கட்சி விவகாரங்களில் ஆணையம் தலையிட முடியாது என்றும், இது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை நாடுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதையும் சுட்டிக்காட்டினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக அதிருப்தி தெரிவித்தனர்.

இறுதியாக, இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், அங்கேயே தீர்வைத் தேடிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. ஒரே விவகாரத்திற்காகப் பல நீதிமன்றங்களை நாடுவதைக் கண்டித்த நீதிபதிகள், ராமதாஸ் தாக்கல் செய்த இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பு பாமகவின் உட்கட்சிப் பூசலில் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“மக்களுக்குத் தண்ணி கூட கொடுக்கல.. விஜய் தான் அந்த சம்பவத்திற்கு காரணம்”…. கரூரில் நடந்தது என்ன?… போட்டுடைத்த பாஜக தலைவர்…. பரபரப்பு…!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,…

2 minutes ago

FLASH NEWS: ஜிவி பிரகாஷுக்கு விழுந்த அடி… இசைஞானி இளையராஜாவின் பாடலை பயன்படுத்த தடை… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு….!

இசைஞானி இளையராஜாவின் காப்புரிமை பெற்ற பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து பாய்ந்து வருகின்றன. அந்த வகையில்,…

6 minutes ago

உல்லாசப் பயணம்.. நள்ளிரவில் ரூமுக்குள் நுழைந்த பெண்…. கோவா சொகுசு லாட்ஜில் தொழிலதிபருக்கு நேர்ந்த பயங்கரம்… அம்பலமான பகீர் உண்மை….!

கர்நாடக மாநிலம் மால்பே பகுதியைச் சேர்ந்த 41 வயதான பிரபல தொழிலதிபர் சந்தீப் சாலியன், நீர் விளையாட்டு உபகரணங்களை வாடகைக்கு…

13 minutes ago

“திடீர் திருப்பம்”…. கடைசி நேரத்தில் செந்தில் பாலாஜி எடுத்த அதிரடி முடிவு…. அண்ணன் – தம்பி போட்ட ரகசிய ப்ளான்… அடுத்து நடக்கப்போவது என்ன…?

ஆட்சி கவிழ்ப்பு புகார் தொடர்பான விசாரணைக்கு செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவருமே இதுவரை போலீசில் ஆஜராகவில்லை…

18 minutes ago

“எனக்கு வேண்டாம் அந்த நாற்காலி”…. தேடி வந்த ஆஃபரை நிராகரித்த திருமாவளவன்…. DCM விவாதத்திற்கு நடுவே பரபரப்பு..!

விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவரது…

23 minutes ago

“டேய் ஆள மாத்தி கடத்திட்டீங்கடா…” கோவையில் அரங்கேறிய உள்ளத்தை அள்ளித்தா காமெடி…!

கோவையில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் சினிமா பாணியில் கடத்தப்பட்டு, பின்னர் கடத்தல் கும்பல் ஆளை மாற்றி கடத்தியதை உணர்ந்து அவரை…

24 minutes ago