#image_title
தமிழ் சினிமாவில் தனக்கு முன்னோடி இல்லாத நடிகர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். மேடை நாடகத்தில் முடி சூடா மன்னனாக விளங்கியவர். 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார்.
அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அதன் பின்னர் வில்லத்தனம் கலந்த நகைச்சுவை பாத்திரம் என்றால் கூப்பிடுங்கள் எம் ஆர் ராதாவை என்றுதான் இயக்குனர்கள் சொல்வார்களாம். அந்தளவுக்கு நடிப்பில் கொடிகட்டி பறந்தார்.
MGR and MR Radha
இதற்கிடையில்தான் அவரின் வாழ்க்கையை திருப்பிப் போடும் அந்த சம்பவம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக எம் ஆர் ராதா, எம் ஜி ஆரை சுட அதற்காக நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். சிறை தண்டனை பெற்று அவர் திரும்பியபோது அவருக்கு சினிமாவில் முன்பு போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவருக்கு வாய்ப்புகள் கொடுத்தால் எம் ஜி ஆரின் கோபத்துக்கு ஆளோவோம் என்று பலரும் அவரை தவிர்த்துவிட்டனர். சிவாஜியின் படங்களில் கூட அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால் சிறு பட்ஜெட் படங்களில் மட்டுமே அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதே நேரத்தில் அவருக்கு முதுமையும் எட்டிப்பார்க்க நாடகங்கள் மட்டும் போதும் என்றிருந்துள்ளார். அதனால் அவரின் சினிமா வாழ்க்கையின் கடைசி காலத்தில் அவர் பேர் சொல்லும்படியான வாய்ப்புகள் எதுவும் அவருக்கு அமையவில்லை.
இதேபோன்று புகழின் உச்சியில்
MK Thyagaraja Bhagavathar
இருந்து லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி அந்தமான் சிறைக்கு சென்று வந்த பின்னர் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரும் தன்னுடைய மார்க்கெட்டை இழந்து, கண்பார்வையை இழந்து தனது சொத்து சுகமெல்லாம் இழந்து திருச்சி சமயபுரம் கோவிலில் அவரை ஆள் அடையாளம் தெரியாமல் ஒரு பக்தர் பிச்சைக்காரர் என நினைத்து பிச்சையிட்ட சம்பவம் எல்லாம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…
மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…
ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…
சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…
நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு…
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள ஒரு ஏழைப் பெண்ணின் மகளுக்குக்…