#image_title
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழில் நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான அன்னபூரணி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் தங்களது இரட்டை குழந்தைகளுடன் துபாயில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவிற்கு சென்றனர். அன்னபூரணி படத்தில் நடித்ததற்காக நயன்தாராவுக்கு விருது வழங்கப்பட்டது.
ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ரத்தமாரே பாடலை எழுதியதற்காக விக்னேஷ் சிவனுக்கும் விருது வழங்கப்பட்டது. அவர்கள் இன்னும் இந்தியாவிற்கு திரும்பி வரவில்லை. அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா காது குத்திக் கொள்ளும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
காது குத்தும் கடைக்கு சென்ற நயந்தாரா தனக்கு பிடித்த கமலை தேர்வு செய்துள்ளார். அதன் பிறகு கடை ஊழியர்கள் நயன்தாராவுக்கு காது குத்துகின்றனர். அப்போது தனது கணவர் எழுதிய ரத்தமாரை பாடலை பாடி க்யூட்டான ரியாக்சன் கொடுக்கிறார் நயன்தாரா. அந்த வீடியோவுக்கு சோசியல் மீடியாவில் லைக்ஸ்சுகள் குவிக்கிறது.
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…
தமிழகத்தில் தவெகவுக்குத் தெரியாமல் வாக்களித்துவிட்டோமோ என்று ஓட்டுப்போட்ட மக்களே நினைக்கும் அளவுக்குத்தான் இன்றைய ‘சோபா மாடல்’ ஆட்சி உள்ளதாக எதிர்க்கட்சித்…
தமிழகத்தில் ஜூன் 30-ஆம் தேதியுடன் பழைய டாஸ்மாக் பார்களின் டெண்டர்கள் முடிவடைய உள்ள நிலையில், அந்நிறுவனத்தின் செயல்பாடுகளில் பல அதிரடி…