புகழின் உச்சத்தில் சினிமா வாழ்க்கை… சிறைக்கு சென்று வந்த பின்னர் மங்குதிசை… பாகவதர் & எம் ஆர் ராதாவின் கேரியரில் நடந்த திருப்புமுனை!

By vinoth on செப்டம்பர் 25, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தனக்கு முன்னோடி இல்லாத நடிகர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். மேடை நாடகத்தில் முடி சூடா மன்னனாக விளங்கியவர். 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார்.

அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அதன் பின்னர் வில்லத்தனம் கலந்த நகைச்சுவை பாத்திரம் என்றால் கூப்பிடுங்கள் எம் ஆர் ராதாவை என்றுதான் இயக்குனர்கள் சொல்வார்களாம். அந்தளவுக்கு நடிப்பில் கொடிகட்டி பறந்தார்.

   

MGR and MR Radha

   

இதற்கிடையில்தான் அவரின் வாழ்க்கையை திருப்பிப் போடும் அந்த சம்பவம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக எம் ஆர் ராதா, எம் ஜி ஆரை சுட அதற்காக நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். சிறை தண்டனை பெற்று அவர் திரும்பியபோது அவருக்கு சினிமாவில் முன்பு போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவருக்கு வாய்ப்புகள் கொடுத்தால் எம் ஜி ஆரின் கோபத்துக்கு ஆளோவோம் என்று பலரும் அவரை தவிர்த்துவிட்டனர். சிவாஜியின் படங்களில் கூட அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

 

இதனால் சிறு பட்ஜெட் படங்களில் மட்டுமே அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதே நேரத்தில் அவருக்கு முதுமையும் எட்டிப்பார்க்க நாடகங்கள் மட்டும் போதும் என்றிருந்துள்ளார். அதனால் அவரின் சினிமா வாழ்க்கையின் கடைசி காலத்தில் அவர் பேர் சொல்லும்படியான வாய்ப்புகள் எதுவும் அவருக்கு அமையவில்லை.

இதேபோன்று புகழின் உச்சியில்

MK Thyagaraja Bhagavathar

இருந்து லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி அந்தமான் சிறைக்கு சென்று வந்த பின்னர் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரும் தன்னுடைய மார்க்கெட்டை இழந்து, கண்பார்வையை இழந்து தனது சொத்து சுகமெல்லாம் இழந்து திருச்சி சமயபுரம் கோவிலில் அவரை ஆள் அடையாளம் தெரியாமல் ஒரு பக்தர் பிச்சைக்காரர் என நினைத்து பிச்சையிட்ட சம்பவம் எல்லாம் நடந்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.