“80 வயசுலயும் இப்படியொரு தைரியமா!”.. நள்ளிரவில் அத்துமீறி வீடு புகுந்த காமவெறியன்.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்.. திருவள்ளூரில் நடந்த பகீர் சம்பவம்..!!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் தாதுக்கான்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பார்வதி, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகக் கணவர் மற்றும் பிள்ளைகள் இன்றித் தனியாக வசித்து வருகிறார். இவரை இவரது அக்கா மற்றும் அண்ணன் பிள்ளைகள் அவ்வப்போது வந்து பார்த்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று விடியற்காலை 3 மணி அளவில் ஏதோ சத்தம் கேட்டு மூதாட்டி வெளியே வந்து பார்த்தபோது, குடிபோதையில் இருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டை நோக்கி வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக வீட்டிற்குள் சென்று கதவை மூட முயன்றபோதும், அந்த வாலிபர் மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்து அவரைப் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அந்த இக்கட்டான சூழலிலும் சற்றும் மனம்பதறாத 80 வயது மூதாட்டி, தான் நடப்பதற்காகப் பயன்படுத்தும் ஊன்றுகட்டையை (கைத்தடி) எடுத்து அந்த வாலிபரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். மூதாட்டியின் அதிரடித் தாக்குதலால் வலி தாங்க முடியாமல் அலறியடித்துக் கொண்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார். அவ்வாறு ஓடும்போது அவசரக் கலக்கத்தில் அவரது செல்போன் கீழே விழுந்ததையும் கவனிக்காமல் ஓடித் தலைமறைவானார். உடனே மூதாட்டி தனது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தார். கீழே விழுந்த செல்போனை எடுப்பதற்காக அந்த வாலிபர் மீண்டும் மூதாட்டியின் வீட்டிற்கு வருவார் என்பதை உணர்ந்த உறவினர்கள், வீட்டிற்குள் ரகசியமாக மறைந்திருந்து, அங்கு வந்த வாலிபரை மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் காவல் ஆய்வாளர் தாமோதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேலை கிராமத்தைச் சேர்ந்த பாளையம் என்பவரின் மகனான குமரேசன் (வயது 35) என்பதும், பெயிண்டராக வேலை செய்யும் இவர் கடும் போதையில் மூதாட்டியிடம் அத்துமீறியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் தனியாக இருந்த 80 வயது மூதாட்டி, துணிச்சலுடன் வாலிபரைத் தாக்கித் தன்னைத் தற்காத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

ஒன்றரை வயது குழந்தையைச் சுவற்றில் மோதி கொன்ற தாயின் கள்ளக்காதலன்.. எலும்புகள் உடைந்து துடிதுடித்த பிஞ்சு உயிர்.. ; மருத்துவரால் அம்பலமான உண்மை..!!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…

2 minutes ago

“பெண் போலீசுக்கு ஆபாச மெசேஜ்.. ஸ்டேஷனுக்கே வந்த கணவர்.. துப்பாக்கி முனையில் மிரட்டிய இன்ஸ்பெக்டர் திலீபன்.. டிஐஜி எடுத்த அதிரடி முடிவு”..!!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…

14 minutes ago

ஸ்கூல் லஞ்ச் பிரேக்கில் காரில் உல்லாசம்.. “ஆசிரியரை குஷிப்படுத்தவே ஆபாச படங்கள் அனுப்பினேன்..” 17 வயது மாணவன் கொடுத்த வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்..!!

ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…

20 minutes ago

BREAKING: திடீரென ரூ.12,000 உயர்ந்தது… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்….!

கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…

37 minutes ago

“ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் கள்ள காதல்”… 2016-ல் கணவனுக்கு நேர்ந்த அதே கதி… 2026-ல் கள்ளக்காதலியின் உடலை எரித்த காதலன்… பகீர் சம்பவம்….!

தெலுங்கானா மாநிலம், பெளகாவி மாவட்டத்தைச் சேர்ந்த பர்வதம்மா (46) என்பவருக்கும், சந்திரப்பா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில்,…

43 minutes ago

கண்ணீர் விட்டு கதறி உயிரை விட்ட அதிமுக நிர்வாகி… பதறியடித்து ஓடிவந்த எடப்பாடி பழனிசாமி… கலங்க வைக்கும் வீடியோ…!

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களும் பிளவுகளும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் மன…

49 minutes ago