#image_title
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஆர்வம் அதிக அளவில் இருக்கும். அதிலும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் என்றால் சொல்லவா வேண்டும். சன் பிக்சர் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் கூலி.
இப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று முன்தினம் வெளியானது. ரஜினியின் லேடிஸ் காலங்களை நினைவுபடுத்தும் வகையில் பல காட்சிகள் அமைந்திருந்தன. டிஸ்கோ பாடலும் இதில் இருப்பதாக பலரும் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இந்த படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.
இப்படத்தில் நாகார்ஜுனா, பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூர், ஸ்ருதிஹாசன் சத்யராஜ் போன்ற பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கின்றார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜன் சம்பளம் எவ்வளவு என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சன் பிக்சர் நிறுவனம் அவருக்கு 60 கோடி சம்பளத்தை கொடுக்க உள்ளதாம்.
லியோ திரைப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் 50 கோடி சம்பளம் வாங்கி இருந்த நிலையில் தற்போது 60 கோடி சம்பளம் வாங்கி நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கின்றார். சன் பிக்சர் நிறுவனம் இவ்வளவு சம்பளம் கொடுத்து இருப்பது படம் வசூலை வாரி குவிக்கும் என்ற நம்பிக்கையில் தான். இந்த எதிர்பார்ப்பை லோகேஷ் கனகராஜ் பூர்த்தி செய்வாரா இல்லையா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…