இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா இணைந்து நடித்த படம் லியோ. இந்த படம் வருகிற 19-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதனை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது.
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இருந்து அடுத்தடுத்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. லியோ படம் ரிலீஸ் ஆக 3 நாட்களே உள்ள நிலையில் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 171-வது படத்தை இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் லியோ படத்தை பிரமோஷன் செய்யும் விதமாக லோகேஷ் அடுத்தடுத்த பேட்டியில் கலந்து கொண்டார். சமீபத்தில் லோகேஷ் அளித்த பேட்டியில், அவரிடம் தலைவரின் 171-வது படம் தான் ரஜினியின் கடைசி படமா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த லோகேஷ், இல்லை. 171-வது படம் ரஜினிகாந்தின் கடைசி படம் இல்லை. இந்த படத்தின் கதை குறித்து விஜயிடம் கூறியதற்கு அவர் சூப்பராக இருக்கிறது என கூறினார். அனிருத் உடனடியாக கதையை ரஜினிகாந்திடம் சொல்லுங்கள் என தெரிவித்தார். இந்த படம் கட்டாயம் LCU-வில் இருக்காது. அடுத்தடுத்த ரஜினிகாந்த் எந்தெந்த படங்களில் நடிக்கப் போகிறார் என்பது எனக்கு தெரியும். ஆனால் அதை பற்றி சொல்ல மாட்டேன் என லோகேஷ் கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (49). இவருக்கும் இவரது மனைவி பிரியங்காவிற்கும்…