Categories: சினிமா

“புழல் சிறையில் TTF வாசன் செய்யும் அலும்பு”…. பைக் எரிக்க சொன்னதுக்கு ஜெயிலில் ஒரே கொண்டாட்டம்…. ரவீந்தர் பேட்டி…!!!

Spread the love

இணையதளங்களிலும் சமூக வலைதள பக்கங்களிலும் கடந்த சில நாட்களாக டிடிஎப் வாசன் என்ற பெயர் அடிக்கடி வெளிவருவதை நாம் பார்த்து வருகிறோம். குறிப்பாக 90ஸ் கிட்ஸ் களுக்கு டிடிஎஃப் வாசன் என்றால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் 2கே கிட்ஸ்களுக்கு அவர் மிகப்பெரிய பிரபலம்.

மின்னல் வேகத்தில் வாகனங்களை ஓட்டுவதால் அவருக்கு இவ்வளவு ரசிகர்களா என்று கேள்வி இருந்தாலும் அதிவேகத்தில் வாகனங்களை இயக்கச் சொல்லி 2k கிட்ஸ்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக அவர் மீது பல புகார்கள் இருந்தது. கோவையில் சாதாரண கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர் தனது தந்தையின் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றி கொண்டிருந்தார். அதன் பின்னர் சுமார் 27 லட்சம் பேர் பின் தொடரும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

சமீபத்தில் அவர் அதிவேகமாக வாகனம் ஓட்டிய காரணத்தினால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பாலு செட்டிசத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்ய முயன்ற போது நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது. இதனால் காயமடைந்த அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் அவர் தனது தரப்பு வாதங்களை முன்வைத்த போதிலும் நீதிபதிகள் இவருக்கு சிறை தண்டனை வழங்கினார்கள். அதைத் தொடர்ந்து தற்போது அவரது வாகனத்தை எரிக்க சொல்லியும் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் புழல் சிறையில் இருந்து வெளிவந்த ரவீந்திர் அவர்கள் ஒரு பேட்டியில் டிடிஎஃப் வாசல் குறித்து கூறியிருந்தார்.

அதாவது அவர் சிறையில் அவ்வளவு ஜாலியாக எல்லாருடனும் பேசி சிரித்துக்கொண்டு இருப்பதாகவும், அவரது வாகனத்தை எரிக்கச் சொல்லி கூறிய போது ஜெயிலே ஒரே கொண்டாட்டத்தில் இருந்தது என்று தெரிவித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் ரவீந்திர் அந்த பேட்டியில் டிடிஎஃப் வாசன் ஜெயிலில் அனைவரையும் வா செல்லம், போ செல்லம் என விளையாட்டாக அழைத்து வருவதாகவும் கூறியிருந்தார்.

Mahalakshmi

Recent Posts

நொடிப் பொழுதில் மிரட்டிய மரணம்…! மும்பை ரயில் நிலையத்தை உலுக்கிய பயங்கரம்… பிரம்மாண்ட மரம் வேரோடு சாய்ந்து… போக்குவரத்து முற்றிலும் முடக்கம்… அதிர்ச்சியில் நெட்டிசென்கள்…!!

மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த கனமழையின் தாக்கத்தால் ஆங்காங்கே…

4 minutes ago

“மரணம் கூட நிம்மதி இல்லாமயா…” காணக் சகிக்காத அவலம்… அமைச்சரின் ஊரிலேயே ஆம்புலன்ஸ் இல்லையா?… அரசை உலுக்கும் பழங்குடியினப் பெண்ணின் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில்…

4 minutes ago

“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்”… விஜயபாஸ்கரை சுற்றும் ‘சாலை விபத்து’ மர்மம்… காவலரைக் காப்பாற்றிய மாஜி அமைச்சர்… நடுரோட்டில் நெகிழ்ச்சி சம்பவம்…!

சாலை விபத்துகளில் சிக்குபவர்களைக் கட்சிப் பாகுபாடின்றி மீட்டு, அவர்களுக்குத் தகுந்த முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் முன்னாள்…

16 minutes ago

“அதிமுகவில் டிடிவி தினகரன்…?” – ஓப்பனாக கேட்ட நிர்வாகி… எடப்பாடி கொடுத்த ஷாக்கிங் பதில்…! டெல்டாவில் பெரும் அதிர்வு…!!

அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

16 minutes ago

“அடேங்கப்பா… 31 கி.மீ கடக்க 2.5 மணி நேரமா…?!” – பெங்களூரு டிராபிக்கில் சிக்கித் தவித்த இன்போசிஸ் இணை நிறுவனர்…! இணையத்தை உலுக்கும் பதிவு…!!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பெங்களூருவில் வெறும் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 2.5 மணி நேரம்…

24 minutes ago

சிங்கள் லைப் தான் கெத்து… “பெத்தெடுத்தா மட்டும் போதாது…” கல்யாணம், குழந்தை எல்லாம் நோ… ஓப்பனாக பேசிய நடிகை பார்வதி… இணையத்தை உலுக்கும் புதிய சர்ச்சை…!

சமூக அழுத்தங்களுக்காகவும், சடங்குகளுக்காகவும் மட்டுமே வாழும் இன்றைய சூழலில், ஒரு குழந்தை பிறப்பிற்குப் பின்னால் இருக்கும் பொறுப்பை உணர்ந்து நடிகை…

28 minutes ago