லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. இந்த படத்தில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இதில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற 19-ஆம் தேதி லியோ திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. லியோ படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களுமே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. படம் ரிலீஸ் ஆக மூன்று நாட்களே உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது உண்டு.
விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போகிறது என்றால் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது. அந்த அளவுக்கு கொண்டாட்டங்கள் இருக்கும். முன்னதாக விஜயின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் ஒரே நேரத்தில் ரிலீசானது.
விஜய் படம் ரிலீஸ் ஆகப்போகிறது என்றால் அஜித் ரசிகர்களும், அஜித் படம் ரிலீஸ் ஆகப்போகிறது என்றால் விஜய் ரசிகர்களும் மாறி மாறி நெகட்டிவ் கமெண்ட்களை கூறுவது உண்டு. இந்நிலையில் விஜய் நடித்த லியோ படம் வெற்றி பெற வேண்டும் என அஜித் ரசிகர்கள் அடித்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் இப்படி அன்போடு இருந்தால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…