லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள இரண்டாவது படம் லியோ. அதிரடியான ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து பிரியா ஆனந்த், மடோனா ஜெபஸ்டின், சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மிஸ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கின்றார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தில் 9 மணிக்கு தான் லியோ முதல் காட்சி என அறிவிக்கப்பட்டாலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு லியோ படம் ரிலீஸ் ஆகிவிட்டது. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.
லியோ திரைப்படம் எல்சியு-வில் தான் உள்ளது. முதல் பாதி கூஸ்பம்பாக உள்ளது. இரண்டாம் பாதி மாசாக இருக்கின்றது. அனிருத் தனது பாடல்களால் மீண்டும் ஒரு மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறார். இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் அவர்களுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. லியோ ஒரு விஷுவல் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையும் என்று பலரும் கூறிய நிலையில் கட்டாயம் அப்படித்தான் அமைந்திருக்கின்றது.
ஆரம்பம் முதல் இறுதி வரை விஜய் ஒவ்வொரு சீனிலும் அசதி இருக்கிறார். சீட்டின் நுனியில் அமர்ந்து படம் பார்க்கும் அளவிற்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. லியோ ஒரு ட்ரெண்ட் செட்டராக இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள். படத்தில் ஒரு டல்லான காட்சிகள் கூட இல்லை.
இதில் அனைத்து ஆக்சன் காட்சிகளும் நியூக்ளியர் ப்ளாஸ்ட் தான் என்று பல ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். தளபதி விஜயின் நடிப்பு உச்சம் தொட்டு இருக்கின்றது. ஒவ்வொரு ஆக்சன் காட்சியும் கூஸ்பம்பாக இருக்கின்றது. அனைவரின் எதிர்பார்ப்பை விட படம் சூப்பராக அமைந்திருக்கின்றது என ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். மிகவும் ஆரவாரமாக இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…