தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தீவிரமாக களத்தில் இறங்கி உள்ள நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக குறைந்தது 56 இடங்கள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் மத்திய உளவுத்துறை தீவிரமாக பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கணித்துள்ளது. அதில் முதல் ஐந்து இடங்கள் எவை என்றும் வேட்பாளர் யார் என்ற தகவலும் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதில் முதலிடத்தில் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள வேளச்சேரி பகுதி உள்ளது. இந்த தொகுதி ஏறத்தாழ பாஜகவிற்கு ஒதுக்குவது உறுதியாகி உள்ளது.
இந்த தொகுதிக்கு பாஜகவில் கடும் போட்டி நிலவு வரும் நிலையில் பாஜகவில் நீண்ட அனுபவம் கொண்டா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் டால்ஃபின் ஸ்ரீதர், மாநில இளைஞர் அணி தலைவர் சூர்யா ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது. இப்படியான சூழலில் தான் சமீபத்தில் பாஜகவின் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பை ஜெயந்த் பாண்டா, வேளச்சேரியில் உள்ள டால்பின் ஸ்ரீதரன் வீட்டுக்கு சென்றுள்ளார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சியின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயக ஆகியோரும் சென்று இருந்தனர்.
இது தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவது, டால்பின் ஸ்ரீதர் கடந்த பல ஆண்டுகளாக வேளச்சேரியில் தீவிர கட்சி பணி செய்து வருகின்றார். கட்சி மேலிடமும் அவருக்கே சீட் என்பதை உறுதி செய்துள்ளது. அதற்கான அடித்தளம் தான் சட்டமன்ற வேட்பாளர் நேரடியாக அவரது வீட்டுக்குச் சென்றது என்று கூறப்படுகிறது. ஆர் எஸ் எஸ் அமைப்பில் 40 ஆண்டு காலம் நீண்ட அனுபவம் கொண்டவர் என்ற முறையில் இந்த முறை பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள வேளச்சேரி தொகுதி டால்ஃபின் ஸ்ரீதரனுக்கு ஒதுக்கப்பட உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் குர்சியாங்கிற்கு உட்பட்ட சித்தோங் பகுதிக்கு, சோப்ரா பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர் தங்களது…
ரயிலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பயணத்தின் போது 3 பேர் மட்டுமே…
மும்பை ஜோகேஷ்வரி ரயில் நிலையத்தில் செப்டம்பர் 16 அன்று நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர் நாகேஷ் மோஹிதே, ஓடிக்கொண்டிருந்த…
கர்நாடக மாநிலம் சன்னகிரி தாலுகாவிற்குட்பட்ட அஜ்ஜிஹள்ளி கிராமத்தில், சக்தி குமார் என்பவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.…
ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…
தெற்கு டெல்லியின் ஆர்கே புரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வேகமாக வந்த கார் ஒன்று,…