குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டம் தேட்கியால் கிராமத்தில் உள்ள தோபன்பாய் கோரட் என்பவரது விவசாய நிலத்தில், 6 வயதான பிரிஷா சோலங்கி என்ற சிறுமி சிறுத்தை ஒன்றால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை இரவு நேரத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
நிலத்தின் அருகே இருந்த சிறுமியை திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை கவ்வித் தூக்கிச் சென்றுள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினரும் கிராம மக்களும் ஓடிவந்து தேடிய நிலையில், அவர் விவசாய நிலத்தின் அருகே படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். பிஞ்சுக் குழந்தையின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது அப்பகுதி மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனிதர்களை வேட்டையாடிய அந்தச் சிறுத்தையை உடனடியாகப் பிடிப்பதற்காக அப்பகுதியில் 8 கூண்டுகளை வனத்துறையினர் அமைத்துத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…