குழந்தைகளுக்குக் காட்ட முயன்ற தந்தை… நொடியில் நேர்ந்த கொடூரம்….. 10 ஆண்டு பாம்பு பிடி வீரருக்கு நேர்ந்த சோகம்….!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் பியாவ்ரா நகரில், விஷமிக்க கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் 10 ஆண்டுகள் அனுபவமிக்க 40 வயதான பாம்பு பிடி வீரர் பிரவேஷ் (என்ற பீனு) பரிதாபமாக உயிரிழந்தார். திங்கள்கிழமை இரவு பியாவ்ரா நகரின் சுதாலியா ரோடு பகுதியில் கட்டுவிரியன் பாம்பு ஒன்று புகுந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற பிரவேஷ், அதனைப் பாதுகாப்பாகப் பிடித்தார். பின்னர் அந்தப் பாம்பை வீட்டிற்கு எடுத்து வந்து தனது குழந்தைகளிடம் காண்பித்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த நச்சுப்பாம்பு அவரைத் தீண்டியது.

பாம்பு கடித்த ஆரம்பத்தில் அதனைப் பெரிதாகக் கருதாத பிரவேஷ், உடனடியாக எவ்வித சிகிச்சையும் பெறாமல் இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவருக்குக் கடும் நெஞ்சு படபடப்பும் உடல் அசௌகரியமும் ஏற்பட்டதை அடுத்து, அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக போபால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பரிந்துரைக்கப்பட்டார்; எனினும், போபால் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

கடந்த 10 ஆண்டுகளாகப் பாம்புகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த பிரவேஷ், இதுவரை பல பெரிய மற்றும் ஆபத்தான பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டுள்ளார். உயிரிழந்த பிரவேஷிற்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், இச்சம்பவம் குறித்துப் பேசிய பியாவ்ரா நகரக் காவல் ஆய்வாளர் சிவராஜ் சிங் சவுகான், பிரவேஷின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யக் குடும்பத்தினர் மறுத்ததைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… உயிருள்ள பாம்பைக் கழுத்தில் சுற்றி சாகசம்… பூஜையின் போது கடித்ததில் பிரபல… பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி…!

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…

7 மணத்தியாலங்கள் ago

பலமுறை நடந்த கொடூரம்… வெளிவந்த உண்மை… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்… நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன தெரியுமா?…!!

ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

7 மணத்தியாலங்கள் ago

என் கணவனுடனா பழகுகிறாய்?… உன்னை உயிரோடு விடமாட்டேன்… ரூ 13 லட்சம் கூலிப்படையை ஏவி… தோழியைத் தீர்த்துக்கட்டிய மனைவியின் வெறிச்செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…

7 மணத்தியாலங்கள் ago

கடவுளே… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?… வீட்டு வாசல் சாக்கடைக்குள் விழுந்த வியாபாரி… காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…

7 மணத்தியாலங்கள் ago