டெல்லி கல்காஜி பகுதியில் பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற இளம்பெண் ஒருவருக்குக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை அரங்கேறியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தனியார் ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
பாதிக்கப்பட்ட இளம்பெண் போலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தின்படி, சம்பவ நாளான செப்டம்பர் 21 அன்று அவரது பிறந்தநாளாகும். அன்றைய தினம் அவர் தனது நண்பருடன் கல்காஜி கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளார். அதன்பிறகு மாலை நேரத்தில் இஸ்கான் கோவிலுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், வழியில் இந்த நயவஞ்சகக் கும்பல் அவரை வழிமறித்துக் கொடூரமான வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளது.
பிறந்தநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய நாளில் பெண்ணுக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் டெல்லி மக்களை உலுக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆவேசத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…