தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெறத் தவறிய நிலையில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைத்தது. இந்தச் சூழலில், தேர்தலில் தவெகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையைப் பயன்படுத்தி, திமுகவின் ஆதரவோடு அதிமுக ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சிகளை மேற்கொண்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த தகவல் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இதனிடையே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தமது பதவிகளை ராஜினாமா செய்தனர். இது குறித்து சட்டமன்றத்தில் கடுமையாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி, தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு தமது கட்சி எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். ஆனால், “எம்ஜிஆரால் தீயசக்தி என்று அறிவிக்கப்பட்ட திமுகவுடன் கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக முயன்றதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அவரது பதவி ஆசைக்குத் துணைபோக விருப்பமின்றிதான் பதவிகளைத் துறந்தோம்” என ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் பகிரங்கமாக விளக்கமளித்தனர்.
இதற்கிடையே மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராகப் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்தார். 100 சட்டமன்ற உறுப்பினர்களைக்கூட வெல்ல முடியாத எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வராக முடியும் என்று கேள்வியெழுப்பிய அவர், தவெக மீது சுமத்தப்பட்ட குதிரை பேரக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்தார்.
இந்த பரபரப்பான சூழலில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயன்ற போது சட்டமன்ற உறுப்பினர்களிடம் பெறப்பட்டதாகக் கூறப்படும் கையெழுத்து கடிதத்தை இன்றைய தினம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிடப் போவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. ஒருவேளை இந்த ஆதாரப்பூர்வமான கடிதம் வெளியாகும் பட்சத்தில், அது அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி, ஒட்டுமொத்தக் கட்சியும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் திரும்பும் சூழலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…