80-களில் பிரபலமாக இருந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி, இவரின் தங்கை லலிதா குமாரையும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வந்தவர் தான் லலிதா குமாரி, ஒரு கட்டத்தில் சினிமா போதும் என ஒதுங்கி நடிகர் பிரகாஷ் ராஜை மணந்து கொண்டார். 16 வருடம் பிரகாஷ் ராஹுடன் வாழ்ந்த லலிதா ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

Lalitha kumari and kovai sarala
இப்போது தயாரிப்பு பக்கம் இறங்கியிருக்கும் லலிதா குமாரி ரொம்பவே பிசியாக உள்ளார். அதுமட்டுமல்ல நடிகை கோவை சரளா உடன் சேர்ந்து நாட்டில் உள்ள புண்ணிய தலங்களுக்கு சென்று அதுகுறித்து யூட்யூபில் பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை சில்க் ஸ்மிதா குறித்து உருக்கமாக லலிதா பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Silk smitha and lalitha kumari
அதில் அவர் கூறுகையில், சாந்தி அக்காவும் சில்க் அக்காவும் நல்ல நண்பர்கள், நான் அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடித்தேன். அப்போது தான் அவர் குறித்து புரிந்து கொண்டேன். குழந்தை உள்ளம் படைத்தவர் சில்க் அக்கா, அவரின் பேச்சும் குழந்தை போல் தான் இருக்கும். என்னை லதா என அன்பாக அழைப்பார் சில்க் அக்கா. ஒரு வாரம் கிராமத்தில் தங்கி ஷூட்டிங் செய்தோம், நான் நன்றாக இருக்கிறேனா, சாப்பிட்டேனா என அடிக்கடி கேட்பார்.

Lalitha kumari about silk smitha
என்னை தங்கை என்று தான் கூறுவார். அவர் இறந்த சமயத்தில் என்னால் செல்ல இயலவில்லை. சாந்தி அக்கா வெளியூரில் இருந்தார், எனக்கு போன் செய்து விசாரித்தார். எனக்கு அந்த சமயத்தில் தான் குழந்தை பிறந்து இருந்தது, என்னை என் வீட்டில் போக கூடாது என தடுத்து விட்டனர். எனக்கு இன்று வரை அது உறுத்தலாகவே உள்ளது. நான் போயிருக்க வேண்டும், சில்க் அக்காவிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார் லலிதா குமாரி.