Categories: சினிமா

முத்து படத்திற்காக கே.எஸ் ரவிக்குமாருக்கு.. ரஜினி கொடுக்க சொன்ன சம்பளம்.. ஆடிப்போன தயாரிப்பாளர்..!!

Spread the love

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஏராளமான குடும்ப திரைப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இவர் இயக்கத்தில் ரஜினி முதலில் நடித்த திரைப்படம் தான் முத்து. கடந்த 1995 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த திரைப்படத்தை கே பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். சரத் பாபு எஜமானாக நடிக்க இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு ஏராளமான விருதுகளும் கிடைத்தன.

இந்தத் திரைப்படம் மூலம் ரஜினிக்கு ஜப்பானில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாலும் உருவானது. ஜப்பானில் அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை 20 ஆண்டுகளுக்கு மேலாக முத்து திரைப்படம் தக்க வைத்துள்ளது. சமீபத்தில் தான் ஆர் ஆர் திரைப்படம் இந்த சாதனையை முறியடித்தது. இந்நிலையில் முத்து திரைப்படத்திற்காக தான் வாங்கிய சம்பளம் பற்றி இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

முத்து திரைப்படத்தில் கமிட்டாகும் முன்பு எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள் என்று ரஜினி கேட்டுள்ளார். அதற்கு அவர் 12 லட்சம் வாங்குவதாக கூறியுள்ளார். உடனே முத்து படத்திற்கு அவரின் சம்பளம் 15 லட்சம் ரூபாய் என்று எழுதி அந்த படத்தை தயாரித்த கே பாலசந்தரிடம் ரஜினி கொடுத்துள்ளார். அதனைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உனக்கு இவ்வளவு சம்பளமாடா என்று ஆச்சரியத்துடன் கேட்டார். ஏனென்றால் அவர் 5 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கியது கிடையாது.

அதற்கு கே எஸ் ரவிக்குமார் நீங்கள் குறைக்க வேண்டும் என்றால் குறைத்துக் கொள்ளலாம் என்று கூற கே பி பாலசுந்தர் ரஜினியே கையெழுத்திட்டான் அதை குறைக்க முடியாது என்று சொல்லி அந்த சம்பளத்தை அப்படியே கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் தான் இயக்கிய நாட்டாமை திரைப்படத்திற்கு வெறும் ஐந்து லட்சம் தான் சம்பளம் கொடுத்தார்கள் என்றும் கேஎஸ் ரவிக்குமார் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

8 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

9 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

9 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

10 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

10 மணத்தியாலங்கள் ago