#image_title
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்தவர் விவேக். தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான் என அழைக்கப்படும் விவேக் ஊட்டி கான்வென்டில் பள்ளி படிப்பையும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி காம் பட்டமும் பெற்றவர் விவேக். இது மட்டும் இல்லாமல் சிறு வயதிலேயே முறைப்படி பரதநாட்டியம் பயின்றவர் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் நடைபெற்ற பரதநாட்டிய போட்டியில் பங்கேற்ற விவேக் அதனின் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள சென்னை சென்ற போது கலாகேந்திரா கோவிந்தராஜன் மூலம் கே பாலச்சந்தர் அவர்களின் அறிமுகம் விவேக் அவர்களுக்கு கிடைத்தது. இவரது நடனத்தையும் மிமிக்கரியும் பார்த்த பாலச்சந்தர் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதன்படி 1987 ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விவேக்.
1990 களில் துணை நடிகராக நடித்த விவேக் பின்னாளில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆனார். பெரும்பாலான திரைப்படங்களில் ஹீரோக்களின் நண்பனாக நடித்துள்ளார் விவேக். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை நகைச்சுவையுடன் கலந்து சொன்னதன் மூலம் பிரபலமானார் விவேக். லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூடநம்பிக்கை போன்றவற்றை தனது நகைச்சுவை பேச்சுகளின் மூலம் எடுத்துரைத்ததால் இவரை ‘சின்ன கலைவாணர்’ என்றும் ‘ஜனங்களின் கலைஞன்’ என்றும் மக்கள் இவரை அழைத்தனர்.
தனது நகைச்சுவை நடிப்பிற்காக நான்கு ஃபிலிம்பேர் விருதுகள், நான்கு தமிழக அரசு விருதுகள், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வென்றவர். விவேக் அவர்களும் வடிவேல் அவர்களும் ஒன்றாக 90கள் மற்றும் 2000 காலகட்டத்தில் சினிமாவில் ஒன்றாக நகைச்சுவைக்காக போற்றப்பட்டனர். விவேக் மற்ற கலைஞர்களின் திறமையை ஊக்குவிப்பார் எனவும் வடிவேலு மற்ற சிறிய நகைச்சுவை கலைஞர்களை வளர விடாமல் தடுப்பார் என்ற கூற்றும் தமிழ் சினிமாவில் பேச்சுகள் இருக்கின்றன.
அதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு முறை வடிவேலு விவேக் அவர்களுக்கு போன் செய்து என்னப்பா வர்றவனை எல்லாம் வளர்த்து விட்டுட்டு இருக்க அப்படின்னு கேட்டு இருக்காரு. அதைக் கேட்டு கடுப்பாகி போன விவேக் நான் எங்கப்பா வளர்த்து விடுறேன், அவங்க திறமையில் அவங்க எல்லாரும் மேல வராங்க. நீயோ நானும் நெனச்சா கூட திறமையால மேல வரவங்கள நம்மளால தடுக்கவே முடியாது என்று சரியான பதிலடி கொடுத்துள்ளார் விவேக். இந்த சம்பவத்தை பற்றி நடிகர் கொட்டாங்குச்சி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…